5ஜி, 108 மெகாபிக்சல் கேமிரா... அசத்த வருகிறது ஜியோமியின் Mi 10!

"5ஜி தொழில்நுட்பத்துடனான இந்த போன் 6.67 இன்ச் 1080p AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது"

5ஜி, 108 மெகாபிக்சல் கேமிரா... அசத்த வருகிறது ஜியோமியின் Mi 10!
Mi 10 5ஜி
  • Share this:
ஜியோமி வருகிற மார்ச் 31-ம் தேதி தனது 5ஜி அப்டேட் உடனான Mi 10 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.

Mi 10 ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்போது மார்ச் 31-ம் தேதி அன்று இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. Mi 10 ப்ரோ போனுக்கு நிகரான அம்சங்களே சிறு வேறுபாடுகளுடன் புதிய Mi 10 ஆக வெளிவருவதாகக் கூறப்படுகிறது.

5ஜி தொழில்நுட்பத்துடனான இந்த போன் 6.67 இன்ச் 1080p AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 108 மெகாபிக்சல் திறன் கொண்ட ரியர் கேமிரா என்பது சிறப்பம்சமாகும். முன் பக்க செல்ஃபி கேமிரா 20 மெகாபிக்சல் கொண்டதாக உள்ளது.


இந்த போனின் பேட்டரி திறன் 4,780mAh ஆக உள்ளது. சீனாவில் இந்த போன் மூன்று ரகங்களாக வெளியானது. 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் இந்திய மதிப்பில் 41 ஆயிரம் ரூபாய். 8ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் ரகம் 44 ரூபாய்க்கும் 12ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் போன் 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இந்தியாவில் 5ஜி புரட்சியை ஏற்படுத்தத் தயார்... புது ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு தயாராகும் ஒன்ப்ளஸ்
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading