ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அதீத முக்கியத்துவோம் தருகிறோம்! - ஜியோமி

’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அதீத முக்கியத்துவோம் தருகிறோம்! - ஜியோமி

ஜியோமி நிறுவனம் (Image: Reuters)

ஜியோமி நிறுவனம் (Image: Reuters)

இந்தியாவிலிருந்து தயாராகும் போன்களை ஏற்றுமதி செய்ய பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் ஜியோமி இந்தியா தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஜியோமி சீன நிறுவனம் என்றாலும் இந்தியாவில் வெளியாகும் ஜியோமி போன்கள் இந்தியாவிலேயேதான் தயார் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ஜியோமி நிறுவனம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஜியோமி இந்தியாவின் தலைவர் முரளிகிருஷ்ணன் கூறுகையில், “இந்தியாவில் விற்பனையாகும் 99 சதவிகித ஜியோமி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலேதான் தயார் செய்யப்படுகிறது. நாங்கள் ஒரு விநாடிக்கு 3 ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறோம்” என்றார்.

  ஜியோமி நிறுவனத்துக்கு இந்தியாவின் இரண்டு உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சிட்டியிலும் தமிழகத்தில் ஸ்ரீபெரும்பதூரிலும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. மேலும், இந்தியாவில் தயாராகும் போன்களே வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஜியோமி ஏற்றுமதி செய்கிறது.

  ஆனால், இன்னும் அதிக வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தயாராகும் போன்களை ஏற்றுமதி செய்ய பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் ஜியோமி இந்தியா தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் பார்க்க: ஜியோமியின் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆகவே வெளியாகும்..!

  Published by:Rahini M
  First published:

  Tags: Xiaomi