ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமிக்கு முதலிடம்!- டாப் ஜியோமி போன் எது?

2019 இரண்டாம் காலாண்டில் மட்டும் ஸ்மாட்போன் ஆன்லைன் விற்பனைச் சந்தை 26 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமிக்கு முதலிடம்!- டாப் ஜியோமி போன் எது?
ஜியோமி
  • News18
  • Last Updated: September 16, 2019, 6:56 PM IST
  • Share this:
இந்தியாவின் ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனைச் சந்தையில் ஜியோமி நிறுவனம் 46 சதவிகிதத்தை கைப்பற்றியுள்ளது.

மார்க்கெட் மானிடர் சேவை என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2019-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு ஸ்மார்ட்போன் விற்பனை விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் 46 சதவிகித போன்கள் ஜியோமி நிறுவனத்தைச் சார்ந்த போன்கள் ஆகும்.

ஜியோமி போன்களிலேயே மூன்றில் இரண்டு மடங்கு விற்பனைச் சாதனையை ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி 6A, ரெட்மி நோட் 6 ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஆகிய போன்கள் நிகழ்த்தியுள்ளன. ஆய்வாளர் அன்ஷிகா ஜெயின் கூறுகையில், “ஆன்லைன் ஸ்மார்ட்போன் சந்தையைப் பொறுத்தவரையில் ஜியோமி மற்றும் ரியல்மி உடன் சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் போன்கள் கடும் போட்டி போட்டுள்ளன. இந்நிறுவனங்களின் வெற்றியே 15 ஆயிரம்- 20 ஆயிரம் ரூபாய் இடையிலான பட்ஜெட்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வகையில் டாப் போன்கள் வரிசையில் ஜியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரியல்மி 3 ப்ரோ ஆகிய போன்கள் முதல் இரண்டு இடங்களை முறையே பிடித்துள்ளன.

மேலும், ஆன்லைன் டெலிவரியிலும் ஜியோமி அதிவிரைவாக செயல்படுவதும் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

2019 இரண்டாம் காலாண்டில் மட்டும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனைச் சந்தை 26 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க: 65 இன்ச்... 4K மாடல்... Mi டிவியை செப் 17-ல் அறிமுகம் செய்கிறது ஜியோமி

மொழிக்கான எங்கள் போராட்டம் பெரிதாக இருக்கும் - கமல்ஹாசன்
First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading