Home /News /technology /

ரெட்மி, மி ஸ்மார்ட்போனின் 10 மாடல்களுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.. சியோமி நிறுவனம் அறிவிப்பு!

ரெட்மி, மி ஸ்மார்ட்போனின் 10 மாடல்களுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.. சியோமி நிறுவனம் அறிவிப்பு!



ரெட்மி, மி ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்

ரெட்மி, மி ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்

Xiaomi : இந்தியாவில் உள்ள 10 ஸ்மார்ட்போன்கள் முதல் Q1 2022 காலாண்டில் சமீபத்திய MIUI 13 வெர்ஷனை பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Xiaomi நிறுவனம் தனது MIUI ஆண்ட்ராய்டு ஸ்கின் மென்பொருளின் சமீபத்திய வெர்ஷனை அதாவது "MIUI 13" என்ற புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த அப்டேட் புதிய Xiaomi மற்றும் Redmi ஃபோன்களின் யூசர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அதாவது, இந்த வருடத்தின் Q1 -முதலாம் காலாண்டில் வெளியான மற்றும் வெளியாகயுள்ள ஸ்மார்ட்போன்கள் இந்த புதிய சமீபத்திய சாப்ட்வேருடன் புதுப்பிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் அல்ட்ரா-பிரீமியம் Mi 11 அல்ட்ரா முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் Redmi Note 10 Prime வரையிலான 10 ஸ்மார்ட்போன்கள் அடங்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்ட இந்த இரண்டு பிராண்டுகளின் புதிய சாப்ட்வேர் வெர்சன், லைவ் வால்பேப்பர், புதிய சைடுபார் மெனு, சிறந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மேம்படுத்தல் மற்றும் பல போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது.

இந்தியாவில் MIUI 13 வெளியீட்டிற்கான Xiaomiயின் அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள 10 ஸ்மார்ட்போன்கள் முதல் Q1 2022 காலாண்டில் சமீபத்திய MIUI 13 வெர்ஷனை பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து Redmi, mi ஸ்மார்ட்போன்களும் சமீபத்திய சாப்ட்வேர் வெர்ஷனில் என்னமாதிரியான அம்சங்களை பெறப் போகின்றன என்பதைப் பார்ப்போம். Xiaomi இந்தியாவில் Q1 2022க்கான திட்டங்களை மட்டுமே வகுத்துள்ளது. அதாவது ஆண்டின் தொடக்கத்தில் வரும் மொபைல்களுக்கு மட்டுமே இந்த அப்டேட்டை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதிக்கான திட்டம் விரைவில் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் : ‘வாட்ஸ் அப்’ வாய்ஸ் மெசேஜில் சிக்கலா..? தீர்வு காண 5 வழிகள் இதோ!

Q1 2022 இன் முதல் காலாண்டில் பின்வரும் 10 Xiaomi ஸ்மார்ட்போன்கள் MIUI 13 சாப்ட்வேரை பெறும்:

1. சியோமி மி 11 அல்ட்ரா (Xiaomi Mi 11 Ultra)
2. மி 11எக்ஸ் ப்ரோ (Mi 11X Pro)
3. சியோமி 11T ப்ரோ (Xiaomi 11T Pro)
4, மி 11எக்ஸ் (Mi 11X)
5. சியோமி 11 லைட் என்இ 5ஜி (Xiaomi 11 Lite NE 5G)
6. மி 11 லைட் (Mi 11 Lite)
7. ரெட்மி மோட் 10 ப்ரோ மேக்ஸ் ( Redmi Note 10 Pro Max)
8. ரெட்மி நோட் 10 ப்ரோ (Redmi Note 10 Pro)
9. ரெட்மி நோட் 10 (Redmi Note 10)
10. ரெட்மி நோட் 10 பிரைம் (Redmi Note 10 Prime)

MIUI 13 உடன், Xiaomi ஸ்மார்ட்போன்கள் புதிய உகந்த ஃபைல் ஸ்டோரேஜ் அமைப்பைப் பெறும். மேலும் இது 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் Xiaomi ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்ட ஃபைல்களின் ரீட் அண்ட் ரைட் வேகத்தை அதிகரிக்கும். நிறுவனம் இந்த MIUI 13 சாப்ட்வேரை "லிக்விட் ஸ்டோரேஜ்" என்று அழைக்கிறது. MIUI 13 இல் உள்ள "Atomized Memory" எனப்படும் புதிய RAM ஆப்டிமைசேஷன், Xiaomi ஸ்மார்ட்போன்களில் பின்னணி செயல்முறை செயல்திறனை 40 சதவிகிதம் அதிகரிக்கும். இரண்டு சிப்கள் தேவைப்படும் பணிகளை இயக்கும் போது ஆட்டோமேட்டிக் CPU மற்றும் GPU ஒதுக்கீட்டை அனுமதிக்கும் புதிய ஆப் முன்னுரிமை மேம்படுத்துதல் அம்சம் இதில் உள்ளது. மேலும் சியோமி ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளை 10 சதவீதம் வரை அதிகரிக்கும் புதிய ஸ்மார்ட் பேலன்ஸ் அம்சமும் உள்ளது.

இதையும் படியுங்கள் : உங்கள் தினசரி நெட்பேக் லிமிட் முடிந்துவிட்டதா? - சிறப்பான டேட்டா பூஸ்டர் ரீசார்ஜ் பேக்குகளை தெரிந்து கொள்ளுங்கள்...

MIUI 13 ஆனது Xiaomi ஸ்மார்ட்ஃபோன்களுக்கு புதிய விட்ஜெட்களையும், செட்டிங்ஸ் மற்றும் டூல்ஸ்களுக்கான விரைவான அணுகலுக்கு புதிய சைடுபார்களையும் கொண்டு வருகிறது. புதிய விட்ஜெட்கள் மூலம், Xiaomi யூசர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பயன்பாட்டு வால்ட் அல்லது முகப்புத் திரையில் தங்கள் ஸ்மார்ட்போன்களை மேலும் கஸ்டமைஸ் செய்ய முடியும். மறுபுறம், சைட்பார் என்பது மற்றொரு செயல்திறன் கருவியாகும். இது Xiaomi ஸ்மார்ட்போன் யூசர்கள் தங்களுக்கு பிடித்த 10 ஆப்கள் மற்றும் டூல்களை மிதக்கும் விண்டோக்களில் ஒரு ஸ்வைப் மூலம் அணுக அனுமதிக்கிறது. இது சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சைடுபார்களை போன்றது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Mobile phone, Redmi, Smartphone, Xiaomi

அடுத்த செய்தி