ரெட்மி நோட் சீரிஸ் போன் விற்பனை 100 மில்லியனைத் தொட்டது- உற்சாகத்தில் ஜியோமி

ரெட்மி நோட்

அக்டோபர் 21-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஜியோமி ஆன்லைன் தளத்திலும் அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச அளவில் இதுவரையில் 100 மில்லயன் ரெட்மி நோட் சீரிஸ் போன்களை விற்பனை செய்துள்ளதாக ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெட்மி இந்தியா இச்சாதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. முதன்முதலாகக் கடந்த 2014-ம் ஆண்டு சீனாவில் ஜியோமியின் முதல் ரெட்மி நோட் போன் வெளியானது. சீன சந்தையில் பெற்ற வெற்றியை அடுத்து ரெட்மி நோட் இந்தியாவில் களம் இறக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரையில் ஜியோமியின் சிறந்த விற்பனையைப் பெற்றுவரும் ஒரே போன் ஆக ரெட்மி நோட் சீரிஸ் போன்கள் உள்ளன. பட்ஜெட் மக்களுக்கான தேவையை அறிந்து அதற்கேற்ற தொழில்நுட்ப அப்டேட்களுடன் வெளியிடுவதே ரெட்மி நோட் சீரிஸின் வெற்றியாகக் கூறப்படுகிறது.

நேற்று ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியன நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரூபாய்க்கு உள் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இந்த இரு போன்களும் வெளியாகி உள்ளன. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் அக்டோபர் 21-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஜியோமி ஆன்லைன் தளத்திலும் அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.

மேலும் பார்க்க: அசத்தல் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ..!

மின்னல் தாக்கும்போது செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது!
Published by:Rahini M
First published: