• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 8 நிமிடங்களில் மொபைலுக்கு ஃபுல் சார்ஜ் - புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சியோமி உலக சாதனை!

8 நிமிடங்களில் மொபைலுக்கு ஃபுல் சார்ஜ் - புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சியோமி உலக சாதனை!

சியோமி

சியோமி

ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணியில் உள்ள சீன நிறுவனங்கள் இடையே முக்கிய போட்டியாக உருவெடுத்து இருப்பது ஃபாஸ்ட் சார்ஜிங்

  • Share this:
குறைவான விலையில் பல தொழிநுட்பங்களை கொண்டு ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் தனக்கென இடம் பிடித்த சீன நிறுவனமான சியோமி சாதனங்களின் பேட்டரிகளுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging) செய்வதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணியில் உள்ள சீன நிறுவனங்கள் இடையே முக்கிய போட்டியாக உருவெடுத்து இருப்பது ஃபாஸ்ட் சார்ஜிங். எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக சியோமி நிறுவனமானது அதன் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக இருந்தது.

2019-ஆம் ஆண்டு மார்ச்சில் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பு வெறும் 17 நிமிடங்களில் 4,000 எம்ஏஎச் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தது. கடந்த ஆண்டு, நிறுவனம் தனது முதன்மை ஸ்மார்ட்போனான மி 10 அல்ட்ராவை 120W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் அறிமுகப்படுத்தியது. இது வெறும் 23 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. பின் கடந்த அக்டோபரில் சியோமி தனது 80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அக்டோபரில் நிரூபித்தது, 4,000 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் வயர்லெஸ் முறையில் 100 சதவீதம் சார்ஜிங் செய்தது.

Also Read:   டெல்லியில் இனி மொபைல் ஆப், ஆன்லைன் வழியாக வீடுகளுக்கே மது டெலிவரி.!

இந்த புதிய பாய்ச்சல் வயர்லெஸ் சார்ஜிங்கில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக சார்ஜ் செய்வதிலும் ஒரு புதிய அளவுகோலை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அப்போது சியோமி கூறி இருந்தது. இந்நிலையில் சியோமி தனது சமீபத்திய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. சியோமி நிறுவனம் 200 வாட் ஹைப்பர்சார்ஜ் (HyperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட் ஃபோனை வெறும் 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இது வயர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமாகும்.



இத்துடன் 120 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி அடங்கிய ஒரு ஸ்மார்ட் ஃபோனை வெறும் 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். தனது புதிய தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது சியோமி. தனது ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை நிரூபிக்க நிறுவனம் அந்த வீடியோவில் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் மாற்றியமைக்கப்பட்ட சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தியது.

Also Read:    கிராஷ் டெஸ்டில் சாதித்த சென்னை தயாரிப்பு ரெனால்ட் ட்ரைபர் கார்!

அந்த ஸ்மார்ட் ஃபோன் சார்ஜ் போட்ட 44 வினாடிகளில் 10% சார்ஜ் ஏறியது, 3 நிமிடங்களில் 50% பின் வெறும் எட்டே நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறியதை அந்த வீடியோ காட்டுகிறது. சியோமியை தவிர, பிற சீன பிராண்டுகளும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மிகவும் தீவிரமாக எடுத்து கொள்கின்றன.

மற்றொரு சீன பிராண்டான ஒப்போ கடந்த ஆண்டு 125W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிரூபித்தது. ,இது 4,000 எம்ஏஎச் பேட்டரியை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: