ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பார்ப்பதற்கு ஐபோன் 14 ப்ரோவை போலவே இருக்கும் சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன்.!

பார்ப்பதற்கு ஐபோன் 14 ப்ரோவை போலவே இருக்கும் சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன்.!

சியோமி 13

சியோமி 13

Xiaomi 13 Smartphone | Xiaomi நிறுவனமானது அதன் புதிய Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஸ்மார்ட் போன்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் வெற்றிகரமான ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது Xiaomi. உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் Xiaomi குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளது. 

தற்போது Xiaomi நிறுவனமானது அதன் புதிய Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஸ்மார்ட் போன்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Xiaomi 13 வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் Xiaomi 13 டிவைஸின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அறிமுகத்திற்கு முன்னதாக Xiaomi 13 டிவைஸின் சில சிறப்பம்சங்கள் மற்றும் ரென்டர்கள் ஆன்லைனில் லீக்காகி இருக்கின்றன.

தற்போது லீக்காகி இருக்கும் சில விஷயங்களை வைத்துபார்க்கும் போது வரவிருக்கும் சியோமி 13 டிவைஸின் டிசைனானது, கிட்டத்தட்ட ஐபோன் 14 ப்ரோவை போலவே இருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் ஆன்லைனில் கசிந்துள்ள சில போட்டோக்கள் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோவின் அதிகாரப்பூர்வ டிசைனை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. லீக்காகி இருக்கும் போட்டோ ஆப்பிளின் ஃபிளாக்ஷிப் மாடல்களை போன்று ஸ்ட்ரெய்ட் எட்ஜஸ், கர்வட் கார்னர்ஸ் மற்றும் ஃபிளாட் ஸ்கிரீனுடன் கூடிய Xiaomi 13 ஸ்மார்ட்போனின் தோற்றத்தை காட்டுகிறது.

ஆன்லைனில் லீக்காகி இருக்கும் விவரங்கள் Xiaomi 13 ஒரு பாக்ஸி டிசைனை கொண்டிருப்பதை காட்டுகிறது. மேலும் இது ஃபிளாட் சைட்ஸ் மற்றும் ஷார்ப் எட்ஜஸ்களுடன் உள்ளன. இந்த டிவைஸ் மினிமல் ஸ்பெசல்களை கொண்டிருப்பதாகவும் தெரிகிறது மற்றும் மேலே சென்டரில் பஞ்ச்-ஹோல் கேமராவை கொண்டுள்ளது. இதன் ரியர் கேமரா செட்டப் டிசைனானது ஹை-என்ட் ஐபோன் ப்ரோ மாடல்களை ஒத்ததாக இருகிறது. குறிப்பாக கேமரா பம்பை (camera bump) இந்த டிவைஸ் கொண்டுள்ளது.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

முக்கியமாக இதில் ஹெட்ஃபோன் ஜாக் இல்லை என்று தெரிகிறது. எனவே ஐபோன் 14 ப்ரோ மாடலில் அறிமுகமான டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை சியோமியும் அறிமுகப்படுத்துமா என்பதும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சியோமி நிறுவனம் ஏற்கனவே இதேபோன்ற அம்சத்தில் செயல்படுவதாகக் கூறி இருக்கிறது. மொத்தத்தில் Xiaomi 13-யின் ஒட்டுமொத்த டிசைன் சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ மாடல்களை நினைவூட்டுவது போல இருப்பதாக கூறப்பட்டாலும் வித்தியாசங்கள் இல்லாமலும் இல்லை. Xiaomi 13 டிவைஸ் அதன் எட்ஜ்ஸ்களை சுற்றி ஒரு சிறிய வளைவை கொண்டுள்ளதை லீக்காகி இருக்கும் விவரங்கள் காட்டுகின்றன. இது ஐபோன்களில் இல்லை. இந்த வளைவுகள் டிவைஸை நழுவ விடாமல் கிரிப்பாக பிடிக்க நிறுவனம் இதை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

Also Read : வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பதை யாருக்கும் தெரியாமல் மறைப்பது எப்படி.?

Xiaomi 13 டிவைஸின் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று லீக்காகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Xiaomi 13 டிவைஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல Xiaomi 13 ஆனது Xiaomi 12 மற்றும் iPhone 14 ஆகியவற்றின் அழகிய கலவையாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். லீக்காகி இருக்கும் விவரங்கள் துல்லியமாக இருந்தால், Xiaomi 13 டிவைஸானது , Xiaomi 12-ன் தனித்தனி பிரிவுகளுடன் iPhone 14 பிளாக்கின் வடிவத்தை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவ கேமரா பிளாக் கொண்ட சிறந்த தோற்றமுடைய டிவைசாக இருக்க கூடும்.

Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, Smartphone, Tamil News, Technology, Xiaomi