முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Xiaomi 12S : 19 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ், அதிநவீன கேமிரா உடன் அறிமுகமான ஜியோமி 12 சிறப்பம்சங்கள்!

Xiaomi 12S : 19 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ், அதிநவீன கேமிரா உடன் அறிமுகமான ஜியோமி 12 சிறப்பம்சங்கள்!

Xiaomi 12S Series

Xiaomi 12S Series

Xioami 12 Series | ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

iiiiiop[]\Xiaomi 12S, Xiaomi 12S Pro மற்றும் Xiaomi 12S Ultra ஆகியவற்றை உள்ளடக்கிய Xiaomi 12S சீரிஸ்-ஐ ஸ்மார்ட்போன் நேற்று இரவு அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று ஸ்மார்ட்போன்களும் குவால்காமின் சமீபத்திய முதன்மை சிப்செட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 மற்றும் லைகா-நிறுவனத்தின் கேமரா அமைப்பு மூலம் இயக்கப்படுகிறது.

XIAOMI 12S, XIAOMI 12S PRO, XIAOMI 12S

விலையை பொறுத்தவரை 8GB RAM மற்றும் 128GB srorage வசதி கொண்ட Xiaomi 12S தோராயமாக ரூ.43,700 ஆகும். 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜின் விலை தோராயமாக ரூ.61,400 வரை இருக்கும். மறுபுறம், Xiaomi 12S Pro 8GB RAM + 128GB இன் விலை தோராயமாக ரூ.59,000. 12GB RAM + 512GB தோராயமாக ரூ. 69,700 வரை செல்கிறது. Xiaomi 12S Ultra, 8GB RAM + 256GB variant இன் விலை தோராயமாக ரூ.70,900 மற்றும் 12GB RAM + 512GB சேமிப்பக ச்வ்வசதி கொண்ட மாடலின் விலை தோராயமாக ரூ.82,600. XIAOMI 12S அல்ட்ரா விவரங்கள் சியோமி 12S அல்ட்ரா ஸ்மார்ட்போன், 6.73 இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது.

டால்பி விஷன் ட்ரூகலர் டிஸ்ப்ளே ஆனது 3200 x 1440 ரெசல்யூஷனைக் கொண்டது. இதன் WQHD+ டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1500 நிட்ஸ் பிரகாசம் மற்றும் HDR10+ சான்றிதழை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளது.

Xiaomi 12S அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் கேமராக்கள். இதன் முதன்மை கேமரா சோனியின் IMX989 லென்ஸை கொண்டிருக்கிறது. IMX989 என்பது 1 இன்ச் சென்சார். இந்த ஸ்மார்ட்போனின் முதன்மை கேமராவில் 50 மெகாபிக்சல் உள்ளது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இது இயங்குகிறது. இரண்டாம் நிலை கேமராவில், 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கேமராவாக 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் support இருக்கிறது.

அதேபோல் இதன் பிரதான கேமரா HyperOIS அம்சம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான ஆதரவை கொண்டிருக்கிறது. மேலும் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது. Sony IMX989 சென்சார் உருவாக்கத்தில் Xiaomi நேரடியாக பங்கேற்றது, மேலும் லென்ஸிற்கான 15 மில்லியன் டாலர் செலவை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டன. Xiaomi 12S அல்ட்ரா கேமரா மாட்யூல் மூன்று லென்ஸ்களையும் உள்ளடக்கிய Leica Summicron 1:1.9-4.1 / 13-120 ASPH கேமரா அமைப்பையும் பெறுகிறது.

Also Read : இந்தியாவில் 19 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் அப் நிறுவனம்.. காரணம் இதுதான்!

Xiaomi லென்ஸ் கண்ணை கூசும் தன்மையைக் குறைக்கவும், ஒவ்வொரு லென்ஸிலும் image consistency-ஐ மேம்படுத்தவும் Leica உதவியுள்ளது. Xiaomi 12S அல்ட்ராவின் கேமரா தொகுதியில் 23K தங்க விளிம்பு உள்ளது. Xiaomi 12S அல்ட்ரா 4,860mAh பேட்டரியுடன் 67W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், 50W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது. Xiaomi 12S Ultra ஆனது Surge P1 ஃபாஸ்ட் சார்ஜிங் சிப்செட் மற்றும் செயல்திறனுக்கு உதவும் Surge G1 பேட்டரி மேலாண்மை சிப்செட் உடன் வருகிறது.

இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இத்துடன் புது ஸ்மார்ட்போனில் கான்ஸ்டண்ட் டெம்பரேச்சர் மோட் வழங்கப்படுகிறது. இது சீரான வெப்ப நிலையில், ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். XIAOMI 12S ப்ரோ விவரங்கள் சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் அளவிலான 2K CURVED AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இதில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், DCI-P3 கலர் கேமட், டால்பி விஷன் மற்றும் HDR10+ சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு போன்றவைகளும் அடக்கம். Xiaomi 12S Pro ஆனது Leica-பிராண்டட் கேமரா தொகுதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

Also Read : ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் ஐபோன் 13 ப்ரோவை விட எவ்வளவு விலை அதிகமாக இருக்கும்.?

அதில் மெயின் கேமராவாக 50 மெகாபிக்சல் சோனி IMX707 சென்சார் (f/1.8) உள்ள இது OIS ஆதரவுடன் வருகிறது. மீதமுள்ள இரண்டு கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

Xiaomi 12S Pro அதே P1 சார்ஜிங் சிப்செட்டுடன் வருகிறது, ஆனால் சிறிய 4,600mAh பேட்டரியுடன் 120W வேகமான சார்ஜிங்குடன் வருகிறது. இருப்பினும், Xiaomi 12 Pro இல் 10W ரிவர்ஸ் சார்ஜிங் இல்லை. XIAOMI 12S விவரங்கள் இது 6.28-இன்ச் FULL HD+ டிஸ்ப்ளே 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10+ சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி, 12ஜிபி வரையிலான LPDDR5 ரேம் போன்ற அம்சங்களுடன் காணப்படுகிறது.

மேலும் இது 12எஸ் ப்ரோ மாடலில் உள்ள அதே மெயின் கேமராவுடன் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. உடன் Xiaomi 12S ஆனது 67W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

புதிதாக ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டும் இன்றி சியோமி Mi பேண்ட் 7 ப்ரோ மற்றும் சியோமி புக் ப்ரோ 2022 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சியோமி புக் ப்ரோ 2022 மாடலில் 4K OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்தகைய புது வரவுகள் மூலமாக ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிறுவ ஜியோமி திட்டமிட்டுள்ளது. அதே நேரம் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்களின் பார்வை ஜியோமி 12S ULTRA பக்கம் திரும்பி உள்ளது.

First published:

Tags: Android, Smart Phone