Home /News /technology /

3 மாடல்களில் சீனாவில் அறிமுகமான Xiaomi 12 சீரிஸ்.. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

3 மாடல்களில் சீனாவில் அறிமுகமான Xiaomi 12 சீரிஸ்.. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

சியோமி

சியோமி

Xiaomi 12, Xiaomi 12 Pro மற்றும் Xiaomi 12X ஆகிய 3 மாடல்கள் Xiaomi 12 சீரிஸில் வெளியிடப்பட்டு உள்ளன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
சியோமி நிறுவனம் தனது Xiaomi 12 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை வரும் 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் பிற நாடுகளிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 12, Xiaomi 12 Pro மற்றும் Xiaomi 12X ஆகிய 3 மாடல்கள் Xiaomi 12 சீரிஸில் வெளியிடப்பட்டு உள்ளன.

Xiaomi 12 ஸ்மார்ட் ஃபோன் விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்..

சீனாவில் Xiaomi 12 ஃபோனின் பேஸ் 8GB + 128GB பேஸ் வேரியன்ட்டின் விலையானது 3,699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 43,400-லிருந்து துவங்குகிறது. இந்த டிவைஸின் மற்ற இரு வேரியன்ட்களில் 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஆப்ஷன்கள் அடக்கம். இவற்றின் விலைகள் முறையே 3,999 யுவான் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 46,900 மற்றும் 4,399 யுவான் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 51,600-ஆக இருக்கிறது. மேலும் இந்த ஃபோன் ப்ளாக், ப்ளூ, பிங்க் மற்றும் ஸ்பெஷல் க்ரீன் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸ்ர் மூலம் Xiaomi 12 இயக்கப்படுகிறது. இந்த ஃபோன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் உடன் வருகிறது. பின்புறத்தில் 50MP Sony IMX766 ப்ரைமரி கேமரா சென்சார் OIS உடன், 13MP அல்ட்ராவைடு கேமரா, 123-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 5MP டெலி-மேக்ரோ கேமரா உள்ளன. செல்ஃபிக்களுக்கு 32MP ஃப்ரன்ட் கேமரா உள்ளது. 6.28 இன்ச், ஃபுல் HD+ ரெசல்யூஷன்மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவுடன் கூடிய AMOLED பேனல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

 also read : வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

Xiaomi 12 Pro விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்..

இது 6.73 இன்ச் WQHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1500 nits பீக் பிரைட்னஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இதில் Snapdragon 8 Gen 1 SoC மற்றும் 4,600 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது 50MP 1/1.28-inch Sony IMX707 ப்ரைமரி கேமரா சென்சாருடன் பின்புறத்தில் ட்ரிப்பிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா சென்சார் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 32MP கேமரா உள்ளது. 6.73-இன்ச் 2K+ E5 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சீனாவில் Xiaomi 12 Pro விலையானது பேஸ் மாடல் 8GB + 128GB வேரியன்ட் 4,699 யுவான் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 55,100-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8GB + 256GB மற்றும் 12GB + 256GB வேரியன்ட்களின் விலை முறையே 4,999 யுவான் தோராயமாக ரூ. 58,600 மற்றும் 5,399 யுவான் தோராயமாக ரூ.63,300 ஆகும்.

also read :டேமேஜ் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்த ஓலா நிறுவனம் - குவியும் புகார்கள்

Xiaomi 12X விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்..

சீனாவில் இந்த மாடலின் விலை 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை 3,199 யுவான் தோராயமாக ரூ. 37,500-ல் இருந்து தொடங்குகிறது. 8GB + 128GB மற்றும் 12GB + 256GB ஆப்ஷன்களும் இந்த மாடலில் உள்ளன. இவற்றின் விலை முறையே3,499 யுவான் தோராயமாக ரூ. 41,000 மற்றும் 3,799 யுவான் தோராயமாக ரூ. 44,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6.28-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் ஃபுல் HD+ ரெசல்யூஷன் ஆகியவை அடங்கும். இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 870 5G SoC உடன் வருகிறது மற்றும் 67W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. பின்புறம் 50MP Sony IMX766 சென்சார், 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5MP டெலி-மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 20MP கேமராவை கொண்டுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Android, Xiaomi

அடுத்த செய்தி