தெரிந்து கொள்ளுங்கள் : Xerox, Jeep என்பது நிறுவனங்களின் பெயர்!

தெரிந்து கொள்ளுங்கள் : Xerox, Jeep என்பது நிறுவனங்களின் பெயர்!
  • Share this:
நம் அன்றாட செயல்பாடுகளில் சில சொற்கள் அடிக்கடி பயன்படுத்துவோம். ஆனால் அவற்றின் வேர்ச்சொல் வேறாக இருக்கும். இருந்து தவறாகவே அவற்றை சொல்லிக்கொண்டிருப்போம். அப்படி ஜெராக்ஸ், ஜீப் உள்ளிட்ட வார்த்தைகள் முறையே நகல், வாகனத்தை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தி வருகிறோம். உண்மையில் அவற்றின் அர்த்தம் வேறு.

Xerox : சான்றிதழை நகல் எடுக்க வேண்டுமென்றால் உடனே நாம் அனைவரும் சொல்வது  Xerox எடுத்து வா என்பது தான். ஆனால் உண்மையில் Xerox என்பது நகல் எடுக்க பயன்படும் இயந்திர நிறுவனத்தின் பெயர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டது இந்த நிறுவனம். 160க்கும் மேற்பட்ட நாடுகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் ஆவண தயாரிப்பு சேவைகளை விற்கும் உலகளாவிய நிறுவனமாகும்.

1906ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி ஜோசப் வில்சன் மற்றும் ஜெஸ்டர் கர்ல்சன் இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். இவர்களின் தயாரிப்பு என்பது அச்சு மற்றும் நகல் எடுக்க உதவும் இயந்திரங்களை (Office printers, production printers & digital presses) தயாரிப்பது தான். நகல் எடுப்பதற்கு Photo Copy என்பது தான் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ஆனால் அதை எடுக்கப் பயன்படுத்தும் இயந்திரத்தின் பெயரை தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.


Jeep : ஜீப் என்பது ஒரு கார் நிறுவனத்தின் பெயர். ஆனால் பலர் காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான மாடல் வாகனத்தை ஜீப் என்று நினைத்துள்ளனர். ஜீப் நிறுவனமும் பல எஸ்.யூ.வி மற்றும் சாதாரண கார்களை தயாரித்து வருகிறது.

Also Watch : கணவருடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை புரட்டி எடுத்த மனைவி...!

First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading