முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உலகின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா?

உலகின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா?

உலகின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா?

உலகின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா?

India's 1st liquid mirror telescope: உத்தரகாண்டில் உள்ள இமயமலைத் தொடரின் தேவஸ்தல் என்ற மலையில் அமைக்கப்பட்டுள்ள திரவக் கண்ணாடி தொலைநோக்கி, வானத்தை ஆய்வு செய்ய உதவும், மேலும் பல விண்மீன் திரள்கள் மற்றும் பிற வானியல் ஆதாரங்களை ஆராந்து  பார்ப்பது சாத்தியமாகும். இது நாட்டின் முதல் திரவ கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரியது

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரகாண்டில் உள்ள இமயமலைத் தொடரின் தேவஸ்தல் என்ற மலையில் அமைக்கப்பட்டுள்ள திரவக் கண்ணாடி தொலைநோக்கி, வானத்தை ஆய்வு செய்யவும், பல விண்மீன் திரள்கள் மற்றும் பிற வானியல் ஆதாரங்களை ஆராந்து  பார்க்கவும் உதவும். இது நாட்டின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும்.

வானத்தைத் தாண்டி இந்த அண்டத்தில் சூப்பர்நோவாக்கள், விண்கற்கள், பிளாக் கோள்கள், விண்வெளிக் குப்பைகள் மற்றும் சிறுகோள்கள் போன்ற நிலையற்ற அல்லது மாறக்கூடிய பொருட்கள் எண்ணிலடங்காத அளவு உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பழங்காலம் தொட்டே மனித இனத்திடம் இருந்து வருகிறது. தன் அறிவியல் வளர்ச்சியால் அவற்றை அறிந்துகொள்ள முயன்றுகொண்டே இருக்கிறனர்.  அப்படி ஒரு வளர்ச்சியின் விளைவு தான் இன்று நாம் பார்க்க இருப்பது.

வியாழனின் தரைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஜூனோ..!

தூரத்தில் இருக்கும் பொருட்களை உற்றுநோக்க மனிதன் கண்டுபிடித்த சாதனம் தான் தொலைநோக்கி. லென்ஸ் எனப்படும் வில்லைகள் வைத்து தொலைநோக்கி செய்து அதன்வழி வானை நோட்டமிட்டு வந்தனர். அதன் துல்லியத்தை மேம்படுத்த தினந்தோறும் ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கிறன. வில்லைகள் மட்டுமின்றி கண்ணாடிகள் பயன்படுத்தியும் தொலைநோக்கியை செய்தனர். மேலும் மற்ற வழிகளையும் தேடி அதன் ஒரு முயற்சியாக திரவத்தை கண்ணாடியாக பயன்படுத்தி வானியலில் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

உங்கள் வீட்டில் கண்ணாடி டம்ளர் இருந்தால் அதன் அடிப்பகுதியைப் பாருங்கள். உட்பக்கம் வளைந்து இருந்தால் நீங்களே ஒரு கையடக்க சிறிய தொலைநோக்கியை வைத்துள்ளீர்கள். பள்ளியில் படித்திருப்பீர்கள் குவி வில்லை, குழி வில்லை என்று. அதே கதை தான். டம்ளரில் அடிப்பகுதி வழியாகப் பார்த்தால் அதன் வளைந்த பகுதியால் தூரமாக உள்ள பொருளையும் சரியாகப் பார்க்கலாம். 

திரவக் கண்ணாடி தொலைநோக்கி:

அந்த டம்ளரின் வளைந்த பரப்பைப்போலவே திரவங்களின் அடர்த்தி, தன்மைக்கேற்ப அதன் மேற்பரப்பு மாறுபடும். திரவ உலோகம் எனப்படும் மெர்குரி - பாதரசம் தான் இந்த திரவ தொலைநோக்கியின் மூலப்பொருள். இது ஒரு பிரதிபலிப்பு திரவமாகும். காய்ச்சல் பார்க்க பயன்டுத்தும் தெர்மாமீட்டரில் பாதரசத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் மேற்பரப்பு ஒரு பரவளைய வடிவத்தில் வளைந்திருக்கும் , இது ஒளியை மையப்படுத்துவதற்கு ஏற்ற அமைப்பு கொண்டது. இதன் மூலம் விண்ணில் இருக்கும் ஒளியை  மையப்படுத்தி அதைப் பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் திரவக் கண்ணாடி தொலைநோக்கி:

இந்தியா, பெல்ஜியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த வானியலாளர்களால் இந்தியாவில் ஒரு திரவக் கண்ணாடி தொலைநோக்கிக் கட்டப்பட்டுள்ளது.  இந்தக் கருவியானது ஒளியைச் சேகரித்து குவிப்பதற்கு திரவ பாதரசத்தின் மெல்லிய படலத்தால் ஆன 4 மீட்டர் விட்டம் கொண்ட சுழலும் கண்ணாடியைப் பயன்படுத்துகிறது. இது 2450 மீட்டர் உயரத்தில் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் (ARIES) தேவஸ்தல் கண்காணிப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. இது அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும். 

மேலும் மைலரின் மெல்லிய வெளிப்படையான படலம் பாதரசத்தை காற்றிலிருந்து பாதுகாக்கிறது. பாதரசத்தில் பிரதிபலித்த ஒளியானது ஒரு அதிநவீன மல்டி-லென்ஸ் ஆப்டிகல் கரெக்டரின் வழியாக குவித்துக்  கூர்மையான படங்களை உருவாக்குகிறது. ஃபோகஸில் அமைந்துள்ள ஒரு பெரிய வடிவ மின்னணு கேமரா படங்களை பதிவு செய்கிறது. திரவக் கண்ணாடித் தொழில்நுட்பத்தின் நிபுணர்,பேராசிரியர் பால் ஹிக்சன் கூறுகையில்  "பூமியின் சுழற்சியால் படங்கள் கேமரா முழுவதும் நிறைக்கின்றன. இந்த செயல்பாட்டு முறையான கண்காணிப்புத் திறனை அதிகரிக்கிறது” என்றார். 

இனி நிலவில் விவசாயம் செய்யலாம்... சாதனை படைத்த நாசா விஞ்ஞானிகள்!

ARIES இன் தேவஸ்தல் ஆய்வகத்தில் நிறுவப்பட்ட வானியல் அவதானிப்புகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் திரவ-கண்ணாடி தொலைநோக்கி ILMT ஆகும்.  தேவஸ்தல் ஆய்வகம் இப்போது இரண்டு, நான்கு மீட்டர் தொலைநோக்கிகளை இயங்கிவருகிறது - ILMT மற்றும் தேவஸ்தல் ஆப்டிகல் தொலைநோக்கி (DOT). இரண்டுமே நாட்டின் மிகப்பெரிய துளை தொலைநோக்கிகள் ஆகும் என்கிறார் . 

ஒவ்வொரு இரவும் சுமார் 10 ஜிபி தரவு வரை பதிவு செய்யும் அளவிற்கு இது மேம்படுத்தப்பட உள்ளது. இதன் தரவுகள் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வரும் ஆய்வாளர்க்ஜளுக்கும் துல்லியமான தகவல்களைக் கொடுக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Astronomy, Galaxy, Science