உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம்...பெருமை கொள்ளும் அபுதாபி

மாத ஊக்கத்தொகை, ஆரோக்கிய இன்சூரன்ஸ், தங்கும் இடம், கல்வி அனைத்தும் ஷ்காலர்ஷிப்பின் கீழ் வந்துவிடும்.

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம்...பெருமை கொள்ளும் அபுதாபி
செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: October 18, 2019, 7:55 PM IST
  • Share this:
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை நுண்ணறிவு படிப்புகளுக்கென்றே உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 17-ம் தேதி திறக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளுக்காகவே தொடங்கப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கு முகமது பின் ஜயீத் பல்கலைக்கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இளங்கலை படிப்புகள் மட்டும் தொடங்கியுள்ளது.

முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது. இங்கு படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் முழு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மாத ஊக்கத்தொகை, ஆரோக்கிய இன்சூரன்ஸ், தங்கும் இடம், கல்வி அனைத்தும் ஷ்காலர்ஷிப்பின் கீழ் வந்துவிடும்.


இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் சுல்தான் அகமது கூறுகையில், “AI என்னும் செயற்கை நுண்ணறிவுதான் உலகை மாற்ற உள்ளது. வருங்காலமே அதில்தான் அடங்கியுள்ளது. இளம் தலைமுறையினரை இப்பல்கலைக்கழகம் இத்துறை சார்ந்த வல்லுநர்களாக உருவாக்கும்” என்றார்.

மேலும் பார்க்க: ’இதெல்லாம் ஒரு பொழப்பா..?’- டிக்டாக் ஆப்ஐ வெளுத்து வாங்கிய ஃபேஸ்புக் மார்க்..!

ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜியோ புகார்!
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading