Home /News /technology /

உலக வானொலி தினம்: தேன் சிந்தும் ராகம் - வானொலி

உலக வானொலி தினம்: தேன் சிந்தும் ராகம் - வானொலி

இன்றளவிலும் தொலைக்காட்சி, யூடியூப் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்டபோதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் அதுவும் பாமர மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது.

இன்றளவிலும் தொலைக்காட்சி, யூடியூப் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்டபோதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் அதுவும் பாமர மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது.

இன்றளவிலும் தொலைக்காட்சி, யூடியூப் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்டபோதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் அதுவும் பாமர மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது.

  உலக வானொலி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அகில இந்திய வானொலி நாள் முழுவதும் இன்று சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது.

  1946-ல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13, உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை ஐநா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ 2011-ல் அறிவித்தது வானொலி என்றாலே வணக்கம் ஆகாசவாணி செய்தி அறிக்கை என்ற சரோஜ்நாராயண சுவாமியின் கரகரப்பான குரலும், பி.எச்.அப்துல் ஹமீதின் காந்த குரலையும் நாம் உதாரணத்துக்கு சொல்வதுண்டு.

  பிபிசி தமிழோசை, இலங்கை வானொலி, சென்னை அகில இந்திய வானொலிகளின் நிகழ்ச்சிகளுக்கும், அறிப்பாளர்களுக்கும் என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தன. வானொலி மூலம் மட்டுமே தகவல்களை அறிந்தும், தெரிந்தும் கொண்ட தலைமுறை இருந்திருக்கிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையிடம் வானொலி சென்றடைந்திருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

  இதையும் படியுங்கள் : கூகுள் அக்கவுண்ட் - உங்களது சுயவிவரங்களை மறைப்பது எப்படி?

  இன்றைய டிஜிட்டல் உலகத்திலும் வானொலியின் தேவை இருக்கத்தான் செய்கின்றது. மற்ற ஊடகங்களைவிட கம்பியில்லா தொலைதொடர்பு ஊடகமான வானொலியை எங்கும், எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்லவும், கேட்கவும் முடியும். இந்த பெட்டிக்குள் எப்படி பாட்டு வருது, பேசுறாங்க என்ற எண்ணங்கள் ஒரு காலத்தில் நம் மனதுக்குள் அலை பாய்ந்திருக்கும். அது வெறும் பெட்டி அல்ல. தகவல் சுரங்கம் என்பதை பின்னர் நாம் அறிந்திருப்போம். அதை பல நேரத்தில் உணர்ந்தும் இருக்கின்றோம்.

  குறிப்பாக பேரிடர் காலங்களில் வானொலியின் சேவை அளப்பரியது. அதுவும் மழை, வெள்ள காலங்களில் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டால் கூட வானொலி மூலம் மக்களுக்கு தகவல்களை கொண்டு செல்ல முடிகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கவும், தகவல்களை பகிரவும் கேரள அரசு ஹாம் ரேடியோக்கள் பயன்பாட்டை ஊக்குவித்ததை நாம் அறிவோம். கொரோனா காலத்தில் கூட பல பள்ளிகளும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதற்கு சமுதாய வானொலிகளை உருவாக்கின. இப்படி வானொலியின் சேவைக்கு இன்றும் தேவை ஏற்பட்டுள்ளது. திடீர் புயல் காலத்தில் நடுக்கடலில் இருக்கும் மீனவர்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும் வானொலியின் பங்கு மகத்தானது.

  இன்றளவிலும் தொலைக்காட்சி, யூடியூப் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்டபோதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் அதுவும் பாமர மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள் வானொலியை பயன்படுத்திதான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றனர். தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை.

  இதையும் படியுங்கள் : வாட்ஸ் அப் மெசேஜை டெலீட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு?

  இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது. தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல், சுந்தர ஆவுடையப்பனின் குறளமுதம் போன்ற நிகழ்ச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. தொலைக்காட்சி பயன்பாட்டுக்கு வராத நாட்கள் காதுகள்தான் கண்கள். செவி வழி நுழையும் செய்திகள், தகவல்கள், பாடல்கள், கதைகள், உரையாடல்கள் மூலம் நம்மிடையே பல்வேறு கற்பனைகளை உருவாக்கும் அற்புதம் வானொலி. அதனால்தான் வானொலியின் வலிமையை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் உரையாடி வருகிறார்.

  - பாலசுப்ரமணியன்
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Mann ki baat

  அடுத்த செய்தி