ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உலக ஈமோஜி தினம்: புதுப்புது ஈமோஜிக்களை அறிமுகப்படுத்த கூகுள், ஆப்பிள் திட்டம்!

உலக ஈமோஜி தினம்: புதுப்புது ஈமோஜிக்களை அறிமுகப்படுத்த கூகுள், ஆப்பிள் திட்டம்!

உலக ஈமோஜி தினம்

உலக ஈமோஜி தினம்

World Emoji Day | முகபாவனைகள் தவிர விலங்குகள், பறவைகள், உணவு ரகங்கள் என அனைத்தையும் ஈமோஜிக்களாகவே வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சர்வதேச அளவில் ஈமோஜிக்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

அன்பு, பாசம், கண்ணீர், துக்கம் என அனைத்தும் இன்று ஈமோஜிக்கள் மூலமாகவே பகிரப்படுகின்றன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மட்டுமல்லாது சாட் செய்யும்போது பல தகவல்களையும் ஒரேயொரு ஈமோஜி மூலமாகவே இன்று கடத்திவிட முடியும்.

பாபுள் ஏஐ என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் சர்வதேச அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஈமோஜிகளாக ’சிரித்துக் கண்ணீர்விடும்’ ஈமோஜியும் ‘பறக்கும் முத்தம்’ கொடுக்கும் ஈமோஜியுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரண நாட்களைவிட பண்டிகை அல்லது விசேஷ நேரங்களிலேயே அதிகப்படியான ஈமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம்.

மக்களைக் கவர கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்தாண்டின் இறுதியில் 60 புதிய ஈமோஜிக்களை அறிமுகப்படுத்துகின்றன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கவரும் வகையிலான ஈமோஜிக்கள், காதலை வெளிப்படுத்தும் ஈமோஜிக்கள் என ஆப்பிள் நிறுவனம் புதிதாக 75 ஐகான்களும் கூகுள் 53 ஐகான்களும் வெளியிட உள்ளன.

முகபாவனைகள் தவிர விலங்குகள், பறவைகள், உணவு ரகங்கள் என அனைத்தையும் ஈமோஜிகளாகவே வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பார்க்க: இன்று வெளியாகும் Mi A3... இளைஞர்களைக் கவர ஜியோமி அதிரடி!

Published by:Rahini M
First published:

Tags: Emoji