ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு

வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

Whatsapp | ஹேக்கர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்வது போன்ற வழக்கமான எந்தவித விஷயத்தையும் செய்யாமல், நூதன முறையில் அவரது தாய்மை உணர்ச்சியை தூண்டி அதன் மூலம் மோசடி கும்பல் ஆதாயம் தேடியுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஆன்லைன் மூலமாக வங்கி கணக்குகளை ஹேக் செய்து மோசடி செய்த வந்த கும்பல் தற்போது பல்வேறு யுக்திகளை கையாள ஆரம்பித்துள்ளனர். கடந்த சில மாதத்திற்கு முன்பு ஃபேஸ்புக்கில் நன் கு அறிமுகமான நபர்கள் போல் புரோபைலை உருவாக்கி, அவரது ஒரிஜினல் புரோபைலில் உள்ள நபர்களின் நண்பர்களிடம் பண உதவி கேட்கும் நூதன மோசடிகள் அரங்கேறி வந்தன.

  தற்போது ஆன்லைன் கொள்ளையர்களின் இலக்கு வாட்ஸ் அப் பக்கம் திரும்பியுள்ளது. அதுவும் இல்லத்தரசிகள், முதியவர்கள், தொழில்நுட்பம் குறித்து பெரிதாக தெரியாதவர்கள் என ஈசியாக ஏமாற்றக்கூடியவர்களை டார்க்கெட் செய்யும் மோசடி செய்து வருகின்றனர். எனவே தான் வாட்ஸ் அப் மூலம் யாராவது பண உதவி கேட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி வங்கி தகவல்களை கேட்டாலோ பகிர வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

  சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலா பெளஜிதன் என்ற பெண்மணி வாட்ஸ்அப் மோசடி கும்பலிடம் சிக்கி 16 ஆயிரம் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்தை இழந்துள்ளார். ஹேக்கர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்வது போன்ற வழக்கமான எந்தவித விஷயத்தையும் செய்யாமல், நூதன முறையில் அவரது தாய்மை உணர்ச்சியை தூண்டி அதன் மூலம் மோசடி கும்பல் ஆதாயம் தேடியுள்ளது.

  ஆம், வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஹேக்கிங் மூலம் திருட முயற்சிக்காமல், மோசடி கும்பல் அவரது மகள் போல் நடித்து 15 லட்சம் ரூபாயை பறிந்துள்ளனர். பவுலா பெளஜிதனுக்கு மோசடி கும்பல் அவளது மகள் அனுப்புவது போலவே வாட்ஸ்அப் மெசெஜ்களை அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய செய்திகள் அனைத்துமே உண்மை போலவும், நம்பகத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்துள்ளது.

  Also Read : இலவசமாக 1GB டேட்டாவை வழங்கும் ஏர்டெல்

  முதலில் பவுலா பெளஜிதனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸ்அப் வந்துள்ளது. அதில் இது தனது புதிய எண் என்றும், பழைய எண்ணை நீக்கிவிடும்படியும் அவரது மகள் செய்தி அனுப்புவது போலவே மோசடி கும்பல் அனுப்பியுள்ளது. ஆனால் மகள் ஏதோ ஒரு காரணத்திற்காக எண்ணை மாற்றியுள்ளார் என நினைத்த பவுலா, அந்த எண்ணிற்கு மெசெஜ்களை அனுப்பியுள்ளார். அப்போது தனக்கு மிகவும் அவசர தேவை உள்ளதால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியுமா? என கேட்டுள்ளனர். பவுலாவும் தனது மகள் தான் என நினைத்து சம்மதித்துள்ளார்.

  உடனே பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு, விவரங்கள், ஐஎஃப்எஸ்சி நெம்பர் போன்ற விவரங்கள் பவுலாவின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பவுலாவும் அந்த வங்கி கணக்கிற்கு கேட்ட தொகையை செலுத்தியுள்ளார். அன்று இரவு தனது மகளுக்கு அனுப்பிய ‘குட் நைட்’ மெசெஜ்க்கு பதில் கிடைக்காததால் சந்தேகம் அடைந்துள்ளார். எனவே மகளின் மற்றொரு எண்ணை தொடர்பு கொண்ட போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

  உடனே பரிவர்த்தனையை நிறுத்தும் படி பவுலா சம்பந்தப்பட்ட வங்கியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களால் கடைசி பரிவர்த்தனையை மட்டுமே நிறுத்த முடிந்துள்ளது. இதனால் மோசடி கும்பலின் கைக்கு 16 ஆயிரம் பவுண்ட்கள் கிடைத்துள்ளன. இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: WhatsApp