கொரோனா தொற்றினால் லாக்டவுன் போடப்பட்ட சமயங்களில் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டன. ஆனால் சிலர் பணம் சம்பாதிக்க புதிய வழிகளை தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம் தங்களை செம்மைப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் முன்னர் எப்போதும் இருந்ததை விட ஈ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் ஆன்லைன் வீடியோ கேமிங்கின் மூலம் பணம் சம்பாதிக்கும் முறை லாக்டவுனுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
முக்கியமாக பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதாலும், இந்த விளையாட்டை ஆன்லைன் சமூக வலைதளங்களில் ஸ்ட்ரீம் செய்து சப்ஸ்கிரைப்களை அள்ளுவதற்கும் பணம் ஈட்டுவதற்கும் பலர் முயற்சி செய்து வருகின்றனர். முக்கியமாக பெண்களும் இந்தத் துறையில் அதிக ஆர்வமாக செயல்பட்டு அதிகமான சப்ஸ்கிரைப்ர்களை அள்ளி வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் உள்ள பெண்கள் அவர்கள் பொழுதுபோக்காக மட்டுமே செய்து வந்த இந்த வீடியோ கேமிங்கை முழுநேர வேலையாக செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளனர். கேமிங் விளையாடுவது மட்டுமல்லாமல் கேமிங் சாப்ட்வேர் டெவலப்பர் ஆகவோ, அல்லது கேமிங் சம்பந்தப்பட்ட துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதாக ஹெச்பி இந்தியா கேமிங் லேண்ட்ஸ்கேப் (HP india gaming landscape) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Read More : வாட்ஸ்அப்பில் இப்படி எல்லாம் கூட ட்ரிக்ஸ் இருக்கா..! இது தெரியாமா போச்சே
மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளவும், என்டர்டைன்மெண்டுக்காகவும் இதை விளையாடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை விளையாடுவதால் மனது சுறுசுறுப்பாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் எளிமையாக பழகுவதற்கும் இது உதவுவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த கேமிங்கிற்கு பர்சனல் கம்ப்யூட்டர்களே மிக வசதியான டிவைஸாக இருப்பதாக கேமர்கள் தெரிவித்துள்ளனர். பர்சனல் கம்ப்யூட்டரில் அதிக வேகம், நல்ல கிராபிக்ஸ், சிறந்த டிஸ்பிளேஆகியவை கிடைக்கும். மேலும் நம் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வடிவமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இதைப் பற்றி பேசிய எச்பி இந்தியா மார்க்கெட்டிங்கின் மூத்த இயக்குனர் விக்ரம் பேடி கூறுகையில் ”இந்தியாவில் உள்ள பிசி கேமிங் லேண்ட்ஸ்கேப், இளம் வயதினருக்கு பல்வேறு வாய்ப்புகளை அள்ளித் தருகிறது. மேலும் கேம்ர்களுக்கான உதவிகளை செய்யவும் அவர்களின் அறிவாற்றலை பெருக்க தேவையான உபகரணங்கள், வாய்ப்புகள் மற்றும் தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள ஓமன் கம்யூனிட்டியின் வழியாக உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பி.சி-யில் உள்ள இது போன்ற வசதிகளால் 39 சதவீத மொபைல் கேமர்கள் பி.சி கேமர்களாக மாறுவார்கள் என்று கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வின்படி வெறும் இரண்டு சதவீத கேமர்களுக்கு மட்டுமே இந்த கேமிங் பயிற்சிக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள பலரும் தங்கள் கேமிங் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் கேமிங் திறமையை வளர்த்துக் கொள்ள கேமிங் ஸ்டாரை பாலோ செய்வதாக தெரிவித்துள்ளனர்.
பிசி கேமில் கேமர்களுக்குள்ள இந்த வலிமையான ஈடுபாட்டினால் எங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நல்ல கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காக புதிய மாற்றங்களை செய்து நவீன கேமிங் தொழில்நுட்பத்தை இந்தியாவில் இனி வரும் காலங்களில் பயன்படுத்துவோம் என பேடி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, India, Technology, Trending, Video Game