உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பே இருக்கும்போது பேடிஎம், போன்பே எல்லாம் பயன்படுத்த முடியுமா?

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் வாட்ஸ்அப் பே பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பே இருக்கும்போது பேடிஎம், போன்பே எல்லாம் பயன்படுத்த முடியுமா?
வாட்ஸ்அப் பே
  • News18
  • Last Updated: February 11, 2020, 3:18 PM IST
  • Share this:
நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஒருவழியாக இந்திய அரசின் அனுமதி பெற்று வாட்ஸ்அப் பே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் இந்தியாவில் வாட்ஸ்அப் பே அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியிடம் வாட்ஸ்அப் அனுமதி கோரியிருந்தது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் வாட்ஸ்அப் பே பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது. வாட்ஸ்அப் இருந்தாலே வாட்ஸ்அப் பே அப்டேட் செய்துகொள்ளலாம்.

இத்தகைய சூழலில் வாட்ஸ்அப் பே இருக்கும் போதே இதர பேமன்ட் செயலிகளான பேடிஎம், போன் பே, அமேசான் பே, கூகுள் பே போன்றவற்றைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி பயனாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதலில் வாட்ஸ்அப் பே என்பது வாட்ஸ்அப் தளத்திலேயே கிடைக்கும் ஒரு அப்டேடட் ஆப்ஷன் ஆகும்.


இதர செயலிகளைப் போல தனியே ஒரு செயலி தேவையில்லை. இதனால் இதர செயலிகளைப் பயன்படுத்துவதுதான் சிரமமாக இருக்கும் என்கிறது வாட்ஸ்அப்.

மேலும் பார்க்க: ஒருவழியாக ’வாட்ஸ்அப் பே' சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்தது..!- பயன்படுத்துவது எப்படி?
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்