ஒரு மாதத்திற்கான இலவச ட்ரையலுடன் ஜியோ அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ப்ளான்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த ப்ளான்கள் குறித்து பார்க்கலாம். இந்த புதிய திட்டம் மாதம் ரூ. 399 ப்ளானுடன் ஆரம்பம் ஆகிறது. இந்த சிம் கார்டுடன் தேவைப்பட்டால் 3 சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கான 4 சிம்களுக்கு 399 + 3•99 என மொத்தம் ரூ. 696 மட்டுமே ஆகிறது.
இந்த ப்ளானின் கீழ் டேட்டாவுக்கு எந்த தினசரி கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. 5 ஜியின் சேவையை இந்த ப்ளானில் அனுபவிக்கலாம். கூடுதலாக எந்த மொபைல் நம்பர் வேண்டும் என்பது நம்முடைய தேர்வாக அமையும். ப்ளான்களை அப்கிரேட் செய்யும்போது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் வீடியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்டவைகளை கண்டு ரசிக்கலாம்.
நீங்கள் ஜியோ ஃபைர் யூசர் அல்லது கார்ப்பரேட் பணியாளர்கள், ஏற்கனவே மற்ற நிறுவனங்களின் போஸ்ட் பெய்ட் சேவையை பயன்படுத்துபவர், ஆக்சிஸ், எச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ. வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு செக்யூரிட்டி டெபாசிட் கிடையாது. ஒரு க்ளிக்கில் துரிதமான சேவையை இந்த ஜியோ ப்ளஸ் ப்ளான் வழங்குகிறது. மேலும் இப்போது நீங்கள் பயன்படுத்தும் நம்பரையே ஜியோவின் போஸ்ட் பெய்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். 70000 70000 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும். வீட்டிற்கே வந்து ப்ளானை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.