முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / கதவுகளை திறப்பது முதல் செடிகளை நடுதல் வரை பல வேலைகள் செய்யும் Spot நாய் ரோபோ!

கதவுகளை திறப்பது முதல் செடிகளை நடுதல் வரை பல வேலைகள் செய்யும் Spot நாய் ரோபோ!

ரோபோ

ரோபோ

டான்ஸ் மட்டுமல்லாமல், அந்த நாய் ரோபோ- காலணிகள், அழுக்கு துணிகளை எடுத்துவருவது, கதவுகளை திறப்பது மேலும் பூச்செடிகளை நடுவது வரை பல செய்லகளை செய்து அசத்தி வருகிறது.

  • Last Updated :

கம்ப்யூட்டர், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு (AI) இவை அனைத்தும் வருங்காலத்தில் சில செயல்களுக்கு மனிதர்களின் தேவையே இருக்காது என்ற நிலையை வெகு விரைவில் உண்டாக்கும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், நாளுக்கு நாள் வெளிவரும் புதுப்புது கண்டுபிடிப்புகளே இதற்கு சாட்சி. அந்தவகையில் ஸ்பாட் (Spot) என்ற நாய் போன்ற ரோபோ ஒன்று இப்போது மிகவும் வைரலாகியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில், ரோபோ பல வேலைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அந்த வகையில் டான்ஸ் ஸ்டெப்புகளை போடும் ஒரு நாய் தான் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

டான்ஸ் மட்டுமல்லாமல், அந்த நாய் ரோபோ- காலணிகள், அழுக்கு துணிகளை எடுத்துவருவது, கதவுகளை திறப்பது மேலும் பூச்செடிகளை நடுவது வரை பல செய்லகளை செய்து அசத்தி வருகிறது. அமெரிக்க ரோபாட்டிக்ஸ் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் செவ்வாயன்று நான்கு கால் கொண்ட ஸ்பாட்டின் புதிய வெர்ஷனை, ஒரு கை மற்றும் தன்னைத்தானே சார்ஜ் செய்யும் திறனுடன் இப்போது வெளியிட்டது.

இந்த ரோபோ ஓயாமல் வேலைசெய்துகொண்டே இருக்கும் வகையில் புதிய வெர்ஷன் உள்ளது. ஸ்பாட் என்ற நாய் ரோபோ கடந்த ஜூன் மாதம் $74,500 முதல் விற்பனைக்கு வந்தது. ஃபோர்டு மோட்டார் கார்ப் நிறுவனத்தில் உள்ள தொழிற்சாலைத் தளம் மற்றும் BP Plcக்கான எண்ணெய் ரிக் ஆய்வுக்கு உதவுவது உட்பட இப்போது 400க்கும் மேற்பட்ட ரோபோக்கள் உலகம் முழுவதும் அயராது வேலை செய்கின்றன.

ரோபோவுக்கு ஒரு புதிய கை, அதுவும் பொருட்களை பிடிப்பதற்கு இருக்க வேண்டுமென்று பல கிளைண்ட்கள் எதிர்பார்த்தனர், என்று பாஸ்டன் டைனமிக்ஸின் வணிக மேம்பாட்டு துணைத் தலைவர் மைக்கேல் பெர்ரி கூறினார். "இந்த ரோபோவானது உலகத்தை உணர்ந்து, அதன் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சங்களினால் ஸ்பாட்டிற்கு இப்போது பல்வேறு இடங்களிலிருந்து டிமாண்டுகள் பெருகும்" என்று பெர்ரி, ராய்ட்டர்ஸிடம் கூறினார்,

ஸ்பாட்டின் கிரிப்பரின் திறமையை "பல டிகிரி தொலைவில் உள்ள ஒரு மனிதன் தன் கைகளை கொண்டு செய்வதை போல சிறந்த மோட்டார் திறன்களை இந்த ரோபோட் செய்யும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார். "டூ யூ லவ் மீ?" பாடலுக்கு மற்ற பாஸ்டன் டைனமிக்ஸ் ரோபோக்களுடன் ஸ்பாட் நடனம் காட்டும் வீடியோவில் ஸ்பாட்டின் கை பற்றித்தான் பலரும் கமெண்ட் செய்திருந்தனர். இதுபற்றிய யூடியூப் வீடியோ டிசம்பர் 29 அன்று வெளியானதிலிருந்து கிட்டத்தட்ட 28 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைக் இந்த 3 நிமிட வீடியோ கொண்டுள்ளது.

' isDesktop="true" id="406251" youtubeid="fn3KWM1kuAw" category="technology">

ரோபோ தயாரிப்பாளரை 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் சாப்ட் பேங்க் குரூப் கார்ப் (SoftBank Group Corp) நிறுவனத்திடமிருந்து பாஸ்டன் டைனமிக்ஸில் ஒரு கட்டுப்பாட்டு பங்கை வாங்க ஹூண்டாய் மோட்டார் குழுமம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. வாழ்க்கையை எளிதாக்குவதற்கான கருவியாக பொதுமக்கள் விரைவில் ரோபோக்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று பெர்ரி நம்புகிறார்.

இப்போது இயங்கும் உலகத்தை, இன்னும் துரிதப்படுத்த இன்னும் 5 வருடங்களில் ரோபோக்கள் பல வேலைகளை கண் இமைக்கும் நேரத்தில் செய்யலாம். அப்போது பலரும் வாயடைத்து போவார்கள். டெக்னோலஜி வேகமாக வளரும் நிலையில் இதுபோன்ற ரோபோக்களிலும் பல மாறுதல்கள் உண்மையில் பலருக்கும் உதவிடும். இந்த நிலை விரைவில் ஏற்படும் என்று நாம் நம்புவோம்!.

First published:

Tags: Artificial Intelligence, Robo