Home /News /technology /

மார்ச் மாதத்தோடு Work From Home முடியப் போகிறதா? ஐடி நிறுவனங்களின் முடிவு என்ன?

மார்ச் மாதத்தோடு Work From Home முடியப் போகிறதா? ஐடி நிறுவனங்களின் முடிவு என்ன?

காட்சி படம்

காட்சி படம்

வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

கோவிட் தொற்று ஊரடங்கால், உலகின் பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இதில் ஐடி நிறுவனங்கள் அனைத்துமே வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் முறையைக் கொண்டுவந்தது. அவ்வபோது தொற்று பரவல் குறைந்த போது, ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைத்தது.

கொரோனா பரவல் தற்போது கிட்டத்தட்ட கட்டுப்பட்டிருக்கும் நிலையில், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் இனி அலுவலகத்துக்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில், டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல், இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி பெருநிறுவனங்கள் அனைத்தும் இனி வீட்டிலிருந்து வேலை கிடையாது, ஹைப்ரிட் வொர்க் மாடலை முன்னிருத்தப்போவதாக அறிவித்துள்ளது.

நியூஸ் 18 செய்திகளுக்கு இது பற்றி டிசிஎஸ் நிறுவனம் கூறிய போது, உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இனி ஹைப்ரிட் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம். சில நாட்கள் அலுவலகம் மற்றும் விரும்பிய அல்லது தேவைப்படும் நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற ஹைப்ரிட் வொர்க் மோடு இனி விரைவில் அமலுக்கு வரும். ஆனால், அதை வெற்றிகரமாக செயல்படுத்த, முதலில் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்துக்கு வர சொல்ல இருக்கிறோம் என்று தெரிவித்தது. அது மட்டுமின்றி, நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே அலுவலகத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டதாகவும் கூறியது.

25 x 25 என்ற திட்டத்தின் அடிப்படையில், மொத்த ஊழியர்களில் ஒரு நாளில் 25 சதவிகிதத்தினர் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றும், ஊழியர்கள் தங்கள் வேலை நாட்களில் 25 சதவிகிதம் வரை அலுவலகத்தில் இருந்து வேலை செய்தால் போதும்.

also read : இப்போதே ஃபேஸ்புக் பாதுகாப்பு அம்சத்தை ஆக்டிவேட் செய்யுங்கள் அல்லது உங்கள் அக்கவுண்ட் லாக் செய்யப்படலாம்

இதே போல, எச்சிஎல் நிறுவனமும் ஹைப்ரிட் வேலை முறையை பின்பற்றி வருகிறது. ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று கருதுகிறது.

இன்போசிஸ் நிறுவனமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊழியர்களை அலுவலகத்தக்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது. இதன் படி, வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது மட்டுமின்றி, கிட்டத்தட்ட 50% வரை ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் போலவே, மற்றொரு டெக் நிறுவனமான காக்னிசன்ட்டும் தெரிவித்துள்ளது.

இதிலிருந்து, பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை இனி அலுவலகத்திற்கு வந்து தான் வேலை செய்யக் கோரும் என்பது உறுதியாகியுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற சூழலில் பலரும் வேலையை ராஜினாமா செய்யவும் தயங்கவில்லை. பல ஊழியர்கள் அங்கிருந்து வேலையை ராஜினாமா செய்தார்கள் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலாக பரவியது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Work From Home

அடுத்த செய்தி