‘கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு...’- இந்திய வாசகர்களிடம் நன்கொடை கேட்கும் விக்கிப்பீடியா!

'இதைப் படிக்கும் நபர் ஒருவர் 150 ரூபாய் நன்கொடை அளித்தால் கூட போதும்'.

‘கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு...’- இந்திய வாசகர்களிடம் நன்கொடை கேட்கும் விக்கிப்பீடியா!
விக்கிபீடியா
  • News18
  • Last Updated: February 12, 2020, 7:29 PM IST
  • Share this:
ஆன்லைன் என்சைக்லோபீடியா என்று அழைக்கப்படும் அளவுக்கு உலகில் உள்ள அத்தனைத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள விக்கிப்பீடியா தள அமைப்பு சங்கடமான சூழலில் இந்திய வாசகர்களிடம் நன்கொடை கேட்டுள்ளது.

தன்னார்வ அமைப்பான விக்கிபீடியா உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் தன்னிச்சையாக இயங்கும் இணையதளம் ஆகும். தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் ஒரு செய்தியை எழுதி, திருத்தி, மாற்றம் செய்ய முடியும்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விக்கிபீடியா தளம் மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்கிறது. விக்கிபீடியா வெளியிட்டுள்ள குறிப்பில், “கொஞ்சம் சங்கடமாகத்தான் உள்ளது. இருந்தாலும் நேரடியாக விஷயத்துக்கு வருவோம். சராசரியாக 1,000 ரூபாயை நன்கொடையாக விரும்புகிறோம். ஆனால், 98 சதவிகித வாசகர்கள் நன்கொடை அளிப்பதில்லை.
இதைப் படிக்கும் நபர் ஒருவர் 150 ரூபாய் நன்கொடை அளித்தால் கூட போதும். உங்களது ஒரு வார காபி-க்கு ஆகும் செலவை எங்களுக்கு நன்கொடையாக அளித்தால் விக்கிபீடியா நீடித்து நிலைக்க உதவியாக இருக்கும். தயவுசெய்து தொடர்ந்து எங்களை ஆன்லைனில் வாழவும் வளரவும் உதவுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பார்க்க: பாரபட்ச நடவடிக்கை... கொந்தளித்த ஊழியர்கள்- பணியைவிட்டு விலகிய கூகுள் HR!
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்