Explainer: ஜியோபோன் நெக்ஸ்ட் ஏன்  இந்தியாவுக்கு குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும்?

மாதிரிப் படம்

ஜியோ செயலிகளுடன் இணைந்து கூகுள் அசிஸ்டெண்ட் சேவையை பயன்படுத்த முடியும். இதனால்,  ஜியோ செயலியில் உள்ள பாடல்களை இசைக்கும்படியோ,  மை ஜியோ செயலி மூலம் தனது வங்கி கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதை காண்பிக்கும்படியோ குகூள் அசிஸ்டெண்டுக்கு பயனர்கள் கட்டளையிட்டு தெரிந்துகொள்ள முடியும்.

  • Share this:
ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் ஒரு முழுமையான  ஸ்மார்ட் போன் ஆகும். உலகிலேயே மிகவும் மலிவான ஸ்மார்ட் போனாக இது இருக்கும் என்றும் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மோர்ட்போன்  குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

ஜியோ போன் நெக்ஸ்ட் என்றால் என்ன?

மலிவான விலையில் அனைத்து வசதிகளும்  உள்ளடக்கிய 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட் போனான ஜியோபோன் நெக்ஸ்ட், ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்ட் பதிப்பில் இயங்கும்.  இணையத்தை முதன்முறையாக பயன்படுத்தும் பயனாளர்களை  இலக்காக வைத்து  ஜியோபோன் நெக்ஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தியான செப்டம்பர் 10ம் தேதி இந்த மொபைல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட 4ஜி திறன்கொண்ட மொபைல்போல் அல்லாமல் இந்த ஸ்போர்ட்போன் ஆண்ட்ராய்ட் அம்சங்கள், கூகுள் பிளே ஸ்டோர், கேமரா, கூகுள் அசிஸ்டெண்ட், அனைத்து எழுத்துக்களையும் மொழிமாற்றம் செய்யும் திறன் என அனைத்து வசதிகளையும்  கொண்டிருக்கும்.

இதன் விலை எவ்வளவு இருக்கும்?

இந்த ஸ்மார்ட் போனின் விலையை ஜியோ அறிவிக்கவில்லை.  விற்பனைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு விலை குறித்த தகவல் வெளியாகக்கூடும். இந்தியா சந்தையில் ஏராளமான பட்ஜெட் மற்றும் மலிவுவிலை 4 ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், ஜியோபோன் நெக்ஸ்ட் எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். ஜியோவின் சிறப்பு டேட்டா திட்டங்களுடன்  இந்த போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜியோபோன் நெக்ஸ்டின் மென்பொருள் அம்சங்கள் என்ன?

தொலைபேசி உள்ளடக்கத்தின் மொழியை ஒரு பொத்தனை  தட்டுவதன் மூலம் மாற்றும் வசதி பயனர்களுக்கு கிடைக்கலாம். உரத்த வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அம்சம் தொலைபேசியின் OS இன் ஒரு பகுதியாக இருக்கும், மேலும் பல்வேறு வகையான மொழி  தடைகள் காரணமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை சிக்கலாக கருதுபவர்களுக்கு இந்த போன் உதவிகரமாக இருக்கக் கூடும்.

இணையப் பக்கம், செயலி, குறுஞ்செய்திகள், போட்டோக்களில் உள்ள எழுத்துக்கள் கூட பயனர்களின் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசித்துக் காட்டக் கூடிய வசதிகளை ஜியோபோன் நெக்ஸ்ட் கொண்டிருக்கும்.

இதேபோல், ஜியோ செயலிகளுடன் இணைந்து கூகுள் அசிஸ்டெண்ட் சேவையை பயன்படுத்த முடியும். இதனால்,  ஜியோ செயலியில் உள்ள பாடல்களை இசைக்கும்படியோ,  மை ஜியோ செயலி மூலம் தனது வங்கி கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதை காண்பிக்கும்படியோ குகூள் அசிஸ்டெண்டுக்கு பயனர்கள் கட்டளையிட்டு தெரிந்துகொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்த போனில் கேமரா மென்பொருட்களும் இருக்கும்.  பட்ஜெட் போன்களில் கிடைக்காத வேகமான மற்றும் உயர்தர கேமரா” அனுபவத்தை ஜியோபோன் நெக்ஸ்டில் கூகுள்  உறுதியளிக்கிறது.  கூகுளின் கூற்றுபடி, குறைந்த ஒளி மற்றும் இரவிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் வசதியை  இதன் கேமரா மென்பொருட்கள் வழங்கும்.

இந்த போனில் உள்ள கேமரா மூலம் உயர்தர போட்டோக்களை எடுக்க முடியும். பிற பட்ஜெட் போன்களில் இந்த வசதியை நாம் எளிதல் பார்க்க முடியாது.  ஜியோபோன் நெக்ஸ்டிற்கான சமீபத்திய ஆண்ட்ராய்டு வெளியீடுகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் கூகிள் உறுதியளிக்கிறது. எனினும்  எந்த அண்ட்ராய்ட்  பதிப்பில் இந்த போன் இயக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது ஏன் முக்கியமானது?

இதுவரை ஜியோவின் அனைத்து அறிமுகங்களும் இந்திய நுகர்வோருக்கு விலையில் சாதகத்தை அளித்துள்ளன. தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை என்பது 5000 ரூபாய்க்கு மேலாகவே உள்ளது.  ஜியோ சிம் அறிமுகப்பட்ட பின்னர், டேட்டாக்களுக்கான விலை என்பது மிகவும் குறைந்துபோனது. அதுபோல், பிற நிறுவனங்கள் தங்கள் போனில் விலையை குறைக்கும் வகையில் ஜியோபோன் நெக்ஸ்ட்டின் விலை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  சாதாரண போன்களை பயன்படுத்திவரும் பல லட்சம் பேரை ஸ்மார்ட்போன் பயனர்க்ளாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாற்றக்கூடும்
Published by:Murugesh M
First published: