ஜியோ கால் கட்டணம் அறிவிப்பு ஏன் தெரியுமா?

ஜியோ கால் கட்டணம் அறிவிப்பு ஏன் தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ
  • Share this:
வேறு நெட்வொர்க்கில் இருந்து வரும் அதிகப்படியான மிஸ்டுகால்களால் ஜியோ, தனது அவுட்கோயிங் கால் கட்டணத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவில் செல்பேசி அழைப்புகள் மலிவானதற்கும், செல்பேசி பயன்பாடு அதிகரித்ததற்கும் ஜியோ வருகையே காரணம் எனலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜியோ அறிவிப்பு வெளியான போது, 4ஜி தொழில்நுட்பத்தில் கட்டணமில்லா இண்டெர்நெட் டேட்டா, இலவச அழைப்புகள் என வாடிக்கையாளர்கள் பயன்பெற்றனர். இன்று ஜியோவை பின் தொடர்ந்து மற்ற நெட்வொர்க்குகளும் இலவச அழைப்புகளையும், டேட்டாக்களையும் அள்ளி வழங்கி வருகின்றன. இதனால் இந்தியாவில் குறுகிய காலத்தில் டிஜிட்டல் புரட்சியே ஏற்பட்டுவிட்டது எனலாம்.

இதனிடையே, ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு கட்டணம் (6 பைசா/நிமிடம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் புருவத்தையும் சற்று உயர்த்து விட்டது. இலவசத்தில் இருந்து பின் வாங்கியதா ஜியோ என்றெல்லாம் பேச்சுகள் எழுந்துள்ளன.


ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஜியோவே விளக்கம் அளித்துள்ளது.

ஒருவர் ஜியோ போனிலிருந்து ஏர்டெல்/வோடபோன் எண்ணுக்கு அழைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த அழைப்பில் இன்கம்மிங் கட்டணமாக வோடபோன்/ஏர்டெல்லுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் ஜியோ நிறுவனம் செலுத்த வேண்டும். இதற்கு இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணம் என்று பெயர். இந்த கட்டண முறையை வகுப்பது ட்ராய் எனப்படும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம். இதே போல், மற்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், அண்மைகாலமாக மற்ற நெட்வொர்க்கில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசியில் இருந்து ஜியோ எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து விட்டு, ஜியோவில் இருந்து எதிர்முனையில் இருப்பவர்களை அழைக்க சொல்கிறார்கள். இதனால், இன்கம்மிங் கட்டணமாக ஜியோ மற்ற நெட்வொர்க்குகளுக்கு அதிகமாக கட்டணம் செலுத்த நேரிடுகிறது.இதனால் நாளொன்று ஜியோவில் இருந்து 65-75 கோடி அவுட்கோயிங் கால்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 3 ஆண்டுகளில் மற்ற நெட்வொர்க்குகளுக்கு ரூ. 13500 கோடி கட்டணமாக செலுத்தியுள்ளது ஜியோ.

எனினும் வரும் 2020 ஆண்டு ஜனவரி முதல் இன்டர்கனெக்ட் பயன்பாட்டு (IUC) கட்டணத்தை ரத்து செய்வது குறித்து டிராய் ஆராய்ந்து வருகிறது. இதனால், ஜியோ அவுட்கோயிங் கட்டணங்கள் 3 மாதத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Also Watch:
First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading