• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Apple iPad-களில் இன்று வரை ஏன் கால்குலேட்டர் App சேர்க்கப்படவில்லை என்று தெரியுமா?

Apple iPad-களில் இன்று வரை ஏன் கால்குலேட்டர் App சேர்க்கப்படவில்லை என்று தெரியுமா?

கால்குலேட்டர்  App

கால்குலேட்டர் App

2007-ஆம் ஆண்டில் ஐபோன் விற்பனை தொடக்கம் என ஆப்பிள் ஸ்மார்ட் போன் துறையை அடியோடு மாற்றியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தொழில்நுட்பத்தை மறுவரையறை செய்யும் போது, ஆப்பிள் பிராண்ட் என்பது ஒருபோதும் ஏமாற்றாத ஒரு பெரிய பெயராகவே தற்போது வரை இருந்து வருகிறது. கடந்த 1976 ஆம் ஆண்டில் ஆப்பிள் 1 நிறுவனத்தின் ப்ரி அசெம்பிள்டு கம்ப்யூட்டரை (pre-assembled computer) அறிமுகப்படுத்தியதில் இருந்து, 2007-ஆம் ஆண்டில் ஐபோன் விற்பனை தொடக்கம் என ஆப்பிள் ஸ்மார்ட் போன் துறையை அடியோடு மாற்றியது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்த நிறுவனம் சர்வஹிஸ அளவில் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனம் என்ற பேயருடன் நீண்ட தொலைவை கடந்து வந்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐ-பேடை(iPad) அறிமுகப்படுத்தியபோது, போர்ட்டபிள் கம்ப்யூட்டிங் ஒரு பெரிய மேம்படுத்தலைப் பெற்றது. இருப்பினும் டிஸ்பிளே ஸ்கிரீன் கொண்ட சாதாரண விலைகுறைந்த மொபைல்கள் அல்லது கேஜெட்டில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் தற்போது வரை Apple iPad-களில் சேர்க்கப்படவில்லை. அது தான் கால்குலேட்டர் ஆப் (calculator app). ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து ஐபோன்கள், ஆப்பிள் மேக் மற்றும் ஆப்பிள் வாட்ச்களிலும் கூட நீங்கள் ஒரு ஸ்டாக் கால்குலேட்டர் app இருப்பதை காணலாம்.

ஆனால் இந்த அடிப்படையான மற்றும் பயனுள்ள கால்குலேட்டர் ஆப்பை, ஆப்பிள் நிறுவனம் அதன் iPad சாதனங்களில் ஏன் புறக்கணிக்கிறது? ஆப்பிள் iPad உருவாக்கப்படும் போது, இந்த கேஜெட்டுக்கான மென்பொருள் மேம்பாட்டுக் குழுவை ஸ்காட் ஃபார்ஸ்டால் (Scott Forstall) வழிநடத்தினார்.மேலும் iOS-ல் இடம்பெற்ற ஆரம்ப ஸ்கீயோமார்பிக் இன்டர்ஃபேஸிற்கும் இவர் பொறுப்பு வகித்தார் என்பது ஆப்பிள் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள விளக்க வீடியோ மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.அந்த வீடியோவில் தரப்பட்டுள்ள விளக்கத்தின்படி ஸ்காட் ஃபார்ஸ்டால் தலைமையிலான மென்பொருள் குழு iPad-ற்கென பிரேத்யேகமாக புதிய கால்குலேட்டர் app-ஐ வடிவமைக்கவில்லை மாறாக iPhone-களில் இருக்கும் கால்குலேட்டர் app-ஐ பயன்படுத்த முடிவு செய்தது. iPad ரிலீஸ் செய்வதற்கு சில நாட்கள் முன் ஃபார்ஸ்டாலை தனது அலுவலகத்திற்கு அழைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், iPad-ற்காக வடிவமைக்கப்பட்ட புதிய கால்குலேட்டர் app எங்கே என்று வினவினார்.

அதற்கு iPhone-களில் இருக்கும் கால்குலேட்டர் app வெர்ஷனையே iPad சாதனத்திலும் அயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் பதில் அளித்துள்ளார். iPad-ன் பெரிய ஸ்கிரீனிற்கு அந்த கால்குலேட்டர் app செட் ஆகாததால் ஸ்டீவ் ஜாப்ஸ் அதிருப்தி அடைந்தார். எனினும் iPad ரிலீசிற்கு சில வாரங்களே இருந்த நிலையில், ஃபோர்ஸ்டால் மற்றும் அவரது குழுவினர் புதிதாக ஒரு புதிய கால்குலேட்டர்இன்டர்ஃபேஸை வடிவமைக்க முடியாது என்பதை அறிந்திருந்தனர். எனவே அப்போதைய புதிய தயாரிப்பான iPad ஒரு கால்குலேட்டர் app இல்லாமலேயே வெளியானது.

Also read... Default font Calibri-க்கு குட்பை சொல்லும் மைக்ரோசாப்ட் - புதிய font குறித்து யூசர்களிடம் கருத்து கேட்பு!

துரதிர்ஷ்டவசமாக, இது iPad யூஸர்களை மூன்றாம் தரப்பு கால்குலேட்டர் app-களை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. அதன் பிறகு 10 ஆண்டுகளில் பல புதிய iPad-கள் வந்து விட்டாலும் இன்னும் ஆப்பிள் நிறுவனம் அதன் கணினி டேப்லெட்டுகளின் வரம்பில் (iPad) கால்குலேட்டர் app-ஐ இன்னும் சேர்க்கவில்லை.இதைப் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ள நிறுவனத்தின் மென்பொருள் பொறியியல் துணைத் தலைவர் கிரேக் ஃபெடெர்ஹி, "மிக சிறந்த iPad கால்குலேட்டர் app-ஐ உருவாக்க நிறுவனம் விரும்புகிறது. இதை எங்களால் சிறப்பாக செய்து முடிக்கும் சூழல் ஏற்பட்டவுடன் நாங்கள் அதை செய்ய விரும்புகிறோம்" என்று கூறி உள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: