நாடு முழுவதும் பல விதமான VPN சேவைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் VPN சேவை, எக்ஸ்ப்ரஸ் VPN ஆகும். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ExpressVPN சேவை, பின்னர் கேப் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டது. கேப் டெக்னாலஜீஸ் பல VPN சேவை வழங்கும் நிறுவனங்களையும், ஆன்டி-வைரஸ் புராடக்ட்களையும் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. VPN சேவை வழங்குநர்களுக்கு புதிய விதிகளை இந்தியா வெளியிட்டுள்ள நிலையில், மிகவும் பிரபலமான ExpressVPN இந்தியாவில் தனது சேவையை நிறுத்திக் கொண்டு வெளியேறுகிறது. இதற்கு காரணம் என்ன மற்றும் புதிய VPN விதிகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆன்லைன் யூசர்கள் பாதுகாப்பாக இயங்க அரசாங்கம் முதல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் வரை பலவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்திக் கொண்டே வருகிறது. நேரடியாக அக்சஸ் செய்ய முடியாத வலைத்தளங்களை, வலைத்தள சேவைகளை அல்லது டிராக் செய்ய முடியாதபடி VPN சேவைகளை பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஆன்லைன் ஃபிராடு, ஹேக்கிங், பிரைவசி இல்லாதமை, அண்டர்கிரவுண்ட் சேனல்கள் என்று பல விதங்களில் VPN பயன்படுத்தி வந்ததை அடுத்து, இந்திய அரசாங்கம் அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டது.
13 வருடங்களாக இந்தியாவில் பெரும்பான்மையான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ExpressVPN சேவை, பாதுகாப்பான சேவைகளை வழங்கி வந்ததாக தெரிவித்தது. யூசர்கள் VPN பயன்படுத்தி பிரவுஸ் செய்யும் போது, அவர்களின் டேட்டா பாதுகாப்பாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு, வெப் டிராஃபிக் மற்றும் ஐபி முகவரிகள் மாஸ்க் செய்யப்படும்.
இங்கிலாந்தை சேர்ந்த VPN நிறுவனமான ExpressVPN, வார்டன் பள்ளியின் மாணவர்களான பீட்டர் புச்சார்டு மற்றும் டான் போமேரான்ட்ஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இணையத்தில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்யும் சூழலை உருவாக்க ஆதரவு தெரிவித்த முதல் குழுக்களில் இவர்களும் உள்ளனர். அது மட்டுமின்றி, VPN Trust Initiative-ஐ இவர்கள் தான் தொடங்கினார்கள்.
Also Read : வேறு பெயரின் கீழ் மீண்டும் இந்தியாவிற்குள் வரும் TikTok.!
ExpressVPN விண்டோஸ், மாக், ஆகிய கணினி OS-களுக்கும், மொபைல் செயலிகளில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் லினக்ஸ் மற்றும் ரூட்டர்களிலும் பயன்படுத்தும் அம்சத்தை வழங்கியிருந்தது. VPN சேவைகளை சப்போர்ட் செய்யாத சாதனங்களிலும் மீடியா ஸ்ட்ரீமர் என்ற ஒரு ஸ்மார்ட் DNS அம்சத்தையும் வழங்கியுள்ளது.
Also Read : வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு
VPN சேவையை பயன்படுத்தும் ஆன்லைன் யூசர்கள் அனைவரின் உண்மையான பெயர், அவர்களின் IP முகவரிகள், உட்பட அவர்களை அடையாளம் காட்டும் விவரங்களையும், தரவுகளையும் VPN சேவை வழங்குனர்கள் சேமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எக்ஸ்ப்ரஸ் VPN நிறுவனம், தனது சேவையை இந்தியாவில் நிறுத்துவதாகவும், இந்தியா சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து சேவை பிளாட்ஃபார்ம்களையும் நீக்குவதாகவும் அறிவித்தது. இந்த மாதம், அதாவது ஜூன் 27, 2022 முதல் புதிய VPN விதிகள் அமலுக்கு வரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India