ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கண்ணை மூடிக்கொண்டு ஊழியர்களை நீக்கும் பெருநிறுவனங்கள்... காரணம் என்ன?

கண்ணை மூடிக்கொண்டு ஊழியர்களை நீக்கும் பெருநிறுவனங்கள்... காரணம் என்ன?

அமேசான்

அமேசான்

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடமிருந்து மிக முக்கியமான அறிவிப்பு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் சமீப காலமாக ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது அமேசான் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சிகரமான ஒரு செய்தியாகவே உள்ளது.

  கடந்த வாரம் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதன்படி, தொழில்நுட்பத் துறை முழுவதும் பணிநீக்கத்தையும், பணியமர்த்தல் முடக்கங்களையும் தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கான காரணம் என்ன, எந்தெந்த நிறுவனங்கள் இது போன்ற பணி நீக்கங்களை செய்து வருகிறது போன்ற பல்வேறு தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

  வீழ்ச்சிக்கான காரணம் என்ன?

  உலக அளவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட லாக்டவுன்கள் மக்களை வீட்டிற்குள்ளே இருக்க கூடிய சூழலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தங்களுக்கான பொருட்களை ஆன்லைன் வழியாக அதிக அளவில் வாங்க தூண்டியது. அதே போன்று, சமூக ஊடகத் தளங்களில் அதிக நேரம் செலவழித்தது, மற்றவர்களுடன் கேம்களை விளையாடுவது, ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது ஆகியவையும் இதற்கான பாதிப்புகளாக கருதப்படுகிறது.

  மக்கள் பழையபடி அலுவலத்திற்கு சென்றாலும், வெளியில் சென்று பிற விஷயங்களை செய்யும் அளவு குறைந்துள்ளது. இது போன்ற காரணிகளால் உலகளாவிய மந்தநிலை தொடங்கியுள்ளது. மேலும் பல சந்தைகளில் அத்தியாவசியமற்ற தயாரிப்புகளுக்கான தேவையை ஏற்கனவே பாதித்துள்ளது. மேலும், கொள்முதல்களும் சில காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

  மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்... வேகமெடுக்கும் ஆப்பிள்.... சிறப்பம்சம் என்ன?

  அமேசானின் பணிநீக்கம்:

  தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அமேசான் நிறுவனம் என்பது மிகவும் நிலையான நிறுவனர்களில் ஒன்றாக உள்ளது. தற்போது, அமேசான் மேற்கொள்ளவுள்ள இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத பணிநீக்கங்கள், இந்நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய அளவாக இருக்கும். அமேசான் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்வது நுகர்வோரின் உணர்வுகள் குறைவாக இருப்பதற்கான சமிக்ஞையாக கருதப்படுகிறது.

  குறிப்பாக விடுமுறை காலத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு இருக்கின்ற இந்த காலமானது, ஈ-காமர்ஸ் தளங்களுக்கு ஆண்டின் சிறந்த காலமாக உள்ளது. உலகம் முழுவதும் அலெக்சா சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அமேசான் சாதனங்களில் பணிபுரிபவர்களை பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

   பிற நிறுவங்களின் பணிநீக்கங்கள் :

  ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடமிருந்து மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதன்படி, விளம்பரங்கள் மற்றும் இதர பிரச்சாரங்கள் சார்ந்த வணிக நிலையானது தற்போது இதன் செயல்திறனை பாதித்துள்ளது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனம் கடந்த வாரம் 11,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.

  இதே போன்று, மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்வீட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணிநீக்கம் தேவை என்று மஸ்க் கூறியுள்ளார். இவர்களை போன்று இல்லாமல், ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தேவை குறைந்து வருவதால் பணியமர்த்துவதை தற்போது குறைத்து வருகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: IT Industry