ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கும் மாதம் ரூ.1600 கட்டணம்... புதிய திட்டத்தில் எலான் மஸ்க்!

இனி ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கும் மாதம் ரூ.1600 கட்டணம்... புதிய திட்டத்தில் எலான் மஸ்க்!

ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு 1600 வசூல்

ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு 1600 வசூல்

Twitter Blue tick க்கு ஒரு மாதத்திற்கு $19.99 ( இந்திய மதிப்பில் 1647.17 ரூபாய்) செலுத்த வேண்டி வரும். செலுத்தவில்லை என்றால் அவர்களின் "சரிபார்க்கப்பட்ட" பேட்ஜ்களை இழக்க நேரிடலாம் எனத் தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  எலான் மஸ்க் ட்விட்டரைத் தன்னகப்படுத்தியதை அடுத்து, மைக்ரோ பிளாக்கிங் தளம் தினசரி ஏதோ ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதன் வரிசையில் அதன் முழு பயனர் சரிபார்ப்பு செயல்முறையையும் திருத்த திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டில் உறுதிப்படுத்தினார்

  பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது ட்விட்டர் கணக்கை சரிபார்த்து சான்றளிக்க 5 முறை முயற்சித்ததாகவும். அனைத்து முறையும் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வேறு வழி உள்ளதா என்று எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மஸ்க், ட்விட்டரின் அனைத்து பயனர் சரிபார்ப்பு செயல்முறையையும் திருத்த திட்டமிட்டுள்ளதாக பதிலளித்தார்.

  மேலும், ட்விட்டர் தனது தளத்தில் கணக்கு வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்த்து சான்றளிக்கும்  ப்ளூ டிக் ( Twitter Blue tick) குறிக்கு கட்டணம் வசூலிக்க பரிசீலித்து வருவதாக, தொழில்நுட்ப செய்திமடல் பிளாட்ஃபார்மர் தெரிவித்துள்ளது.

  ட்விட்டர் ப்ளூ கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயங்குதளத்தின் முதல் சந்தா சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ட்வீட்களைத் திருத்துவதற்கான விருப்பம் உட்பட மாதாந்திர சந்தா அடிப்படையில் “பிரீமியம் அம்சங்களுக்கான பிரத்யேக அணுகலை” வழங்குகிறது. இந்த விருப்ப சந்தாவிற்கு மாதம் $4.99 ( இந்திய மதிப்பில் 411.17 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

  இப்போது கொண்டு வர இருக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயனர்கள் Twitter Blue tick-க்கு ஒரு மாதத்திற்கு $19.99 ( இந்திய மதிப்பில் 1647.17 ரூபாய்) செலுத்த வேண்டி வரும். செலுத்தவில்லை என்றால் அவர்களின் "சரிபார்க்கப்பட்ட" பேட்ஜ்களை  இழக்க நேரிடலாம் எனத் தெரிகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Elon Musk, Twitter, Twitter new policy