முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / குடியரசு தினம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுலை வடிவமைத்த இந்தியர் யார் தெரியுமா?

குடியரசு தினம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுலை வடிவமைத்த இந்தியர் யார் தெரியுமா?

கூகுள் டூடுல்

கூகுள் டூடுல்

Republic Day 2023 | அகமதாபாத்தின் கனோரியா கலை மையத்தில் ஒரு கண்காட்சியை நடத்தியதாகவும், அதில் தனது 84 படைப்புகளைக் காட்சிப்ப்டுத்தியதாகவும் பார்த் கோதேகர் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு டூடுலுக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பார்த் கோதேகர் என்ற ஓவியரின் டூடுலை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது.

பிரபல தேடுதளமான கூகுள், சிறப்பு தினங்களில் தனது தளத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், குடியரசு தினம் கொண்டாடப்படுவதால், அதனை கெளரவிக்கும் வகையில், பென்சில் கொண்டு வரையக்கூடிய மாண்டலா போன்ற டூடுல் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த பார்த் கோதேகர் என்ற ஓவியர் இந்த டூடுலை வடிவமைத்துள்ளார். கூகுளின் கூற்றுப்படி, காகிதத்தை கையால் வெட்டி வடிவமைக்கப்பட்டதைப் போன்று டூடுல் உள்ளது. குடியரசு தின அணிவகுப்பின் பல கூறுகளுடன் அதன் பின்னணியில் ராஷ்டிரபதி பவன் இருப்பதுபோல் அந்த சிறப்பு டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டூடுலில் இந்தியா கேட், அணிவகுப்பில் இடம்பெறும் வாகனங்கள், ராணுவ வீரர்களின் சாகசங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

கூகுள் டூடுல்

யார் இந்த பார்த் கோதேகர்?

குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் பார்த் கோதேகர் பிறந்து வளர்ந்தார். தனது கலைப்படைப்புகள் குறித்து கூறுகையில், தனது ஒவ்வொரு படைப்பும் பேப்பர்கட் வகையைச் சேர்ந்தவை எனவும், அனைத்தும் ஒவ்வொரு காகிதமாக கையால் செதுக்கப்பட்டவை என கூறுகிறார்.

மேலும், பார்த் கோதேகருக்கு அதிக கல்விப் பின்னணி இல்லை என்ற போதிலும், பள்ளி முடித்தவுடன் அனிமேஷனில் ஆர்வம் கொண்டு, அதனை கற்க தொடங்கினார். ஆனால், தனக்கு 2D கலை வடிவங்களை மட்டும் கற்க ஆர்வம் இருந்ததாலும், தான் படித்த நிறுவனத்தில் 3D அனிமேஷன் படிப்புகளை மட்டும் வலியுறுத்தியதால், தான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறினார். அங்கிருந்து வெளியேறிய பிறகு, முழு நேரமும் ஓவியங்கள் வரைவதில் செலவிட்டு ஓவியத்தைக் கற்க தொடங்கினார்.

தொடக்கத்தில் டிசைனிங் தனக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்ததாக கூறும் பார்த், பின் அதுவே தனக்கு முழுநேர பணியாக மாறியதாக கூறுகிறார். மேலும், தன்னிடம் போதுமான கலைப் படைப்புகள் கிடைத்தவுடன், அகமதாபாத்தின் கனோரியா கலை மையத்தில் ஒரு கண்காட்சியை நடத்தியதாகவும், அதில் தனது 84 படைப்புகளைக் காட்சிப்ப்டுத்தியதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, Adobe-க்குச் சொந்தமான சமூக ஊடக தளமான Behance மூலம் லண்டனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் தனது படைப்புகள் இடம்பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறுகிறார். கூடுதலாக, 2016ஆம் ஆண்டில் பார்த் கோதேகர், நியூசிலாந்து அரசாங்கத்தால் அந்த நாட்டில் தனது படைப்புகளை காட்சிப்படுத்த அழைக்கப்பட்டார் என்பது கூடுதல் சிறப்பு.

First published:

Tags: Google, Google Doodle, Republic day