ஹூவே-க்கு அமெரிக்காவில் தடையா?- வெள்ளை மாளிகையில் முக்கிய ஆலோசனை!

கடந்த மே மாதம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஹூவே நிறுவனத்தை ட்ரம்ப் இணைத்தார்.

Web Desk | news18
Updated: July 20, 2019, 9:42 PM IST
ஹூவே-க்கு அமெரிக்காவில் தடையா?- வெள்ளை மாளிகையில் முக்கிய ஆலோசனை!
ஹூவே (Reuters)
Web Desk | news18
Updated: July 20, 2019, 9:42 PM IST
ஹூவே டெக்னாலஜிஸ் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்வது தொடர்பாக சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது.

ஹூவே நிறுவனம் சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம் என தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது அமெரிக்கா. தொடர்ந்து ஹூவே இக்குற்றச்சாட்டை மறுத்து வந்தாலும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. சமீபத்தில் பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஹூவே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க ஆலோசனை செய்யப்பட்டது.

ஆனால், பிரிட்டனுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகவே எச்சரிக்கைவிடுத்தார். இந்நிலையில் விரைவில் கூகுள், மைக்ரான் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவினுள் ஹூவேக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.


கடந்த மே மாதம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஹூவே நிறுவனத்தை ட்ரம்ப் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ’ஹூவே மீது கவனம் இருக்கட்டும்’- பிரிட்டனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...