இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 2ம் தேதிடெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர் உள்ளிட்ட 8 நகரங்களில் சேவையை தொடங்கி, இந்தியாவிலேயே 5ஜி சேவையை தொடங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பார்தி ஏர்டெல் பெற்றது.
இதனையடுத்து தசரா பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகியவையும் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை இந்தியாவில் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை விட பன்மடங்கு வேகமான 5ஜி சேவை எப்படி இருக்கும், அதனை வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்கள் சப்போர்ட் செய்யுமா என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன.
ஐபோன் யூஸர்களுக்கு அதிர்ச்சி:
இந்தியாவின் 5ஜி சேவையை அனைத்து விதமான ஸ்மார்ட் போன்களும் சப்போர்ட் செய்யும் என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு மட்டும் பிரத்யேகமான பதிப்பு தேவை என கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் மெளனம் காத்து வந்த நிலையில், தற்போது அதன் ரகசியம் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் சேவை பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே 5ஜி நெட்வொர்க் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவை கிடைக்கக்கூடிய போன்களின் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐபோன் இல்லாதது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read More: 5G சேவையை பயன்படுத்த சாஃப்ட்வேர் அப்டேட் இல்லாமல் தவிக்கும் யூஸர்கள்
இந்தியாவில் எப்போது ஐபோன்கள் 5ஜி சேவையை அதிகரிக்கும் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “டிசம்பர் 2022க்குள், 5ஜி வசதி கொண்ட ஐபோன்கள் இந்தியாவின் 5G ஆதரவுக்கான மென்பொருள் புதுப்பிப்பைப் பெறும்” எனக் கூறியுள்ளது.
“நெட்வொர்க் சரிபார்ப்பு மற்றும் தரம் மற்றும் செயல்திறனுக்கான சோதனை முடிந்தவுடன், ஐபோன் பயனர்களுக்கு சிறந்த 5G அனுபவத்தை வழங்க, இந்தியாவில் உள்ள எங்கள் கேரியர் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் ஐபோன்களுக்கான 5ஜி சேவை மென்பொருள் புதுப்பிப்பு மூலமாக கிடைக்கப்பெறும்” என அறிவித்துள்ளது.
இந்தியாவின் 5ஜி சேவையை ஆதரிக்கக்கூடிய மற்ற ஸ்மார்ட் போன் வகைகளைப் பொறுத்தவரை சாம்சங், ரியல் மீ, ஒன் ப்ளஸ், ஓபோ, ஜியோமி ஆகிய ஸ்மார்ட்போன்களின் சில மாடல்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்வதாக தெரிகிறது. நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்துக்குள் தனது அனைத்து 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களும் 5ஜி சேவைக்கான ஆதரவை பெறும் என சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, IPhone, Smartphone