ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப்பில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள புதிய அம்சங்களின் பட்டியல்

வாட்ஸ்அப்பில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள புதிய அம்சங்களின் பட்டியல்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் சமீபத்தில் வாட்ஸ்அப் வெப்-ற்கான ஸ்டிக்கர் மேக்கரை அறிமுகப்படுத்தியது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற நிறுவனங்கள் போட்டிக்கு இருக்கும் போது சவாலான இந்த சூழலில் கூட சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் யூஸர்களை கொண்டு உலகளவில் பிரபலமான மெசேஜிங் ஆப்-ஆக இருந்து கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். மெசேஜிங் மார்க்கெட்டில் வாட்ஸ்அப்பை முந்த போட்டி நிறுவனங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

யூஸர்களை ஈர்க்க அவ்வப்போது பல புதிய அம்சங்களை பரிசோதித்து தனது மெசேஜிங் சர்வீஸில் சேர்த்து வருகிறது whatsApp நிறுவனம். இந்த ஆண்டில், வாட்ஸ்அப் வெப்-ற்கான இமேஜ் எடிட்டர், டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் மற்றும் வாய்ஸ் நோட்ஸ்களின் ப்ளே-பேக் ஸ்பீட் போன்ற சில எளிமையான டூல்களின் வெளியீடுகளை பார்த்தோம்.இந்நிலையில் வரும் 2022 -ல் வாட்ஸ்அப் நாம் பெற போகும் அம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

லாஸ்ட் சீன் ஃபார் செலக்ட் யூஸர்ஸ் (Last seen for select users):

யூஸர்கள் தாங்கள் கடைசியாகப் பார்த்த மற்றும் அவர்கள் படித்த மெசேஜ்களுக்கு ப்ளூ டிக்குகளை மறைக்க தற்போது அனுமதிக்கிறது. இதனிடையே செலக்ட் செய்யப்பட்ட contacts-களிலிருந்து Last seen-னை மறைக்க நிறுவனம் ஒரு புதிய ஆப்ஷனை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆப்ஷன் வெளிவந்தால் பல யூஸர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் மொபைல் ஆப் (Sticker Maker for Mobile App):

வாட்ஸ்அப் சமீபத்தில் வாட்ஸ்அப் வெப்-ற்கான ஸ்டிக்கர் மேக்கரை அறிமுகப்படுத்தியது. வரும் ஆண்டில் இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் மொபைல் App-யையும் வந்தடையும் என்று கூறப்படுகிறது. தற்போது, வாட்ஸ்அப் மொபைல் App ப்ரீ-லோடட் அல்லது தேர்ட் பார்ட்டி ஸ்டிக்கர் பேக்ஸ்களை பயன்படுத்தி ஸ்டிக்கர்களை அனுப்ப யூஸர்களை அனுமதிக்கிறது. 91Mobiles-ன் சமீபத்திய அறிக்கை iOS மற்றும் Android யூஸர்கள் விரைவில் தங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கபடலாம் என கூறுகிறது.

கம்யூனிட்டிஸ் (Communities);

குரூப் சேட்களை நெறிப்படுத்த கம்யூனிட்டிஸ் அம்சத்தை அறிமுகப்படுத்த whatsApp செயல்படுவதாக கூறப்படுகிறது. அடிப்படையில் இந்த அம்சம் குரூப் அட்மின்களுக்கு குரூப்பின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும். தகவலின் ஓட்டத்தை நிர்வகிக்க (flow of information) sub-groups-களை உருவாக்க அட்மின்களை இந்த அம்சம் அனுமதிக்கும் என தெரிகிறது.

ப்ளேபேக் கன்ட்ரோல்ஸ் ஃபார் ஆடியோ மெசேஜஸ்..

நேரடி வாய்ஸ் மெசேஜ்களை யூஸர்கள் தற்போது ப்ளேபேக் கன்ட்ரோல் ஸ்பீடாக கேட்டு வரும் நிலையில், ஃபார்வர்டு செய்யப்படும் வாய்ஸ் நோட்ஸ்களையும் ஸ்பீட் செய்வதற்கான அம்சத்தை நிறுவனம் டெஸ்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.

நியூ டைம் லிமிட்..

டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப். இது எனேபிள் செய்யப்பட்டால் சேட்டிலிருந்து மெசேஜ்களை தானாகவே டெலிட் செய்கிறது. தற்போது 7 நாட்களுக்குப் பிறகு தானாகவே மெசேஜ்கள் டெலிட் ஆகும் வகையில் நடைமுறையில் இருக்கிறது. இதற்கான டைம் லிமிட்டை யூஸர்கள் 90 நாட்களாக அதிகரித்து கொள்ளும் வகையில் விரைவில் புதிய அப்டேட் வரலாம்.

மெசேஜ் ரியாக்ஷன்..

வாட்ஸ்அப் சில காலமாக மெசேஜ் ரியாக்ஷன் என்ற அம்சத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால் வாட்ஸ்அப் யூஸர்கள் தங்களுக்கு அனுப்பபடும் ஷேர்டு மெசேஜுக்கு டெக்ஸ்ட் மூலம் பதிலளிப்பதை விட, குறிப்பிட்ட எமோஜிக்களை பயன்படுத்தி ரியாக்ட் செய்ய அனுமதிக்கும்.

First published:

Tags: WhatsApp