வாட்ஸ்அப்பின் மிகவும் விமர்சிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை ... நாளை கடைசி நாள்!

வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை 15ம் தேதிக்குள் ஏற்கவில்லை என்றால் மொபைலில் உங்கள் கணக்கு செயலிழந்துவிடும் என்று முன்னர் தெரிவித்திருந்தது.

  • Share this:
வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை இறுதியாக நடைமுறைக்கு கொண்டு வரும் நாள் மே 15 என்று நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான புதிய கொள்கைகளுக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் காரணமாக அதனை நடைமுறைபடுத்துவதில் தாமதமானது. மேலும் தனது கொள்கை விதிகளை ஏற்றால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டது.

மே15ம் தேதிக்குள் கொள்கை விதிகளை ஏற்காவிடில் செயலி யூசர்களின் மொபைலில் வேலை செய்யாது என்று சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், புதுப்பிப்பை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை வாட்ஸ்அப் ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. எவ்வளவு தான் விமர்சிக்கப்பட்டாலும் இதனை செயல்படுத்துவதில் நிறுவனம் தீவிரமாக இருக்கிறது. தற்போதுவரை தனியுரிமைக் கொள்கையில் எந்த வித மாற்றத்தையும் செய்யவில்லை.

இருப்பினும், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை 15ம் தேதிக்குள் ஏற்கவில்லை என்றால் மொபைலில் உங்கள் கணக்கு செயலிழந்துவிடும் என்று முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது கணக்கை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸ்அப் செயலிழக்காது. அதற்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் நீங்கள் நிறைய செயல்பாடுகளை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி உங்கள் சாட் லிஸ்ட், நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்புகளுக்கான அணுகல்கள் மற்றும் பிற கூடுதல் கட்டுப்பாடுகள் செயலிழக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, கொள்கைகளை ஏற்காவிடில் செயலி உங்கள் சுயவிவர கணக்கை நீக்காது. அதற்கு மாறாக செயலியில் ஒரு குறிப்பிட்ட வாரங்களுக்கு பிறகு தொடர்ந்து நினைவூட்டல்களைப் (Notifications) அனுப்பும் என்றும் சில காலத்திற்குப் பிறகு செயல்பாட்டை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியான நோட்டிபிகேஷன்களை பெறும் நேரத்தில், யூசர்கள் தங்களது வாட்ஸ்அப்பில் வரையறுக்கப்பட்ட செயலிழப்பை சந்திப்பார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. பின்னர் புதுப்பிப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை அனைத்தையும் இழக்கக்கூடும் என்று விளக்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி யூசர்கள் தங்கள் சாட் பட்டியலை அணுக முடியாது. ஆனால் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து நினைவூட்டல்களைப் பெறும்போது உள்வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெற முடியும் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. மேலும், உடனடி செய்தியிடல் பயன்பாட்டிற்கு வரும் செய்திகளை உங்களால் பார்க்க முடியாது. உங்கள் தொலைபேசியில் நோட்டிபிகேஷன்கள் இயக்கப்பட்டிருந்தால், உள்வரும் செய்திகளை நோட்டிபிகேஷனிலேயே காணலாம் மற்றும் அங்கிருந்து பதிலளிக்கலாம்.

பின்னர் அதுவும் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சில வாரங்கள் வரையறுக்கப்பட்ட செயல்பாட்டிற்குப் பிறகு, நீங்கள் உள்வரும் அழைப்புகள் அல்லது அறிவிப்புகளைப் பெற முடியாது. மேலும் வாட்ஸ்அப் உங்கள் தொலைபேசியில் செய்திகளையும் அழைப்புகளையும் அனுப்புவதை நிறுத்திவிடும்" என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் நிறுவனம் அறிவித்துள்ள சில வாரங்கள் என்பது எத்தனை நாட்கள் என்று இப்போது வரை வெளியிடவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்திய போட்டி ஆணையம் (CCI) டெல்லி உயர்நீதிமன்றத்தில், வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை அதிகப்படியான தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் அதிக யூசர்களை ஈரப்பதன் மூலம் அதன் இலக்கு விளம்பரங்களுக்காக நுகர்வோரை பின்தொடர்வதற்கு வழிவகுக்கும். எனவே இது ஒரு ஆதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்தல் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் முற்றிலுமாக மறுத்து வருகிறது.
Published by:Arun
First published: