முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Whatsapp-ன் புதிய பாதுகாப்பு அம்சம்... மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்ற புது ஐடியா

Whatsapp-ன் புதிய பாதுகாப்பு அம்சம்... மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்ற புது ஐடியா

WhatsApp

WhatsApp

WhatsApp Account Security | யூஸர் அக்கவுண்ட்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலை (unauthorised access) பெற முயற்சிக்கும் மோசடி செய்பவர்களின் இலக்குகளில் ஒன்றாகவும் வாட்ஸ்அப் மாறி வருகிறது. எனவே கூடுதல் பாதுகாப்பிற்காக, மெட்டாவுக்குச் சொந்தமான இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்விஸ் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மில் ஒன்றாக இருந்து வருகிறது WhatsApp. இந்தியாவில் கோடிக்கணக்கான யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல அப்டேட்ஸ்களை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இதனிடையே யூஸர் அக்கவுண்ட்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலை (unauthorised access) பெற முயற்சிக்கும் மோசடி செய்பவர்களின் இலக்குகளில் ஒன்றாகவும் வாட்ஸ்அப் மாறி வருகிறது. எனவே கூடுதல் பாதுகாப்பிற்காக, மெட்டாவுக்குச் சொந்தமான இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்விஸ் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது. எனினும் பெரும்பாலான யூஸர்கள் தங்கள் அக்கவுண்ட்களில் இந்த அம்சத்தை பொதுவாக எனேபிள் செய்வதில்லை.

சில சந்தர்ப்பங்களில் தற்செயலாக தங்கள் 6-டிஜிட் டூ-ஃபேக்டர் பாஸ்கோடை ஹேக்கர்கள் அல்லது சைபர் கிரிமினல்களிடம் யூஸர்கள் ஷேர் செய்து விடுகிறார்கள். எனவே மோசடி செய்பவர்களிடமிருந்து யூஸர்கள் தங்கள் அக்கவுண்ட்களை பாதுகாக்க புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் சேர்ப்பதாக கூறப்படுகிறது.

WABetaInfo-ன் அறிக்கையின்படி, WhatsApp-ஆனது இப்போது உள்நுழைவு ஒப்புதல் அதாவது login approval கேட்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் மோசடி செய்பவர்களைத் தடுப்பதன் மூலம் தளத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த Login Approval அம்சமானது தற்போது டெவலபிங் ஸ்டேஜில் இருப்பதாகவும், யூஸர்களின் பயன்பாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது. இருப்பினும் இந்த புதிய பாதுகாப்பது அம்சம் பரந்தஅளவில் வெளியிட படும் முன் ப்ளே ஸ்டோரில் உள்ள WhatsApp-ன் பீட்டா சேனலில் வரும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Also Read : சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம்... திடீரென எடுத்த அதிரடி முடிவு.! 

அறிக்கையின்படி இந்த Login Approval அம்சம், வேறொரு யூஸர் ஒருவர் வேறு ஸ்மார்ட் போனிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களில் login செய்ய முயற்சிக்கும் போது, உங்களுக்கு இன்-ஆப் அலெர்ட்டை (in-app alert) அனுப்பும். நீங்கள் ஏற்கனவே login செய்துள்ள மொபைலில் இருந்து அனுமதி வழங்கிய பின்னரே ஒரு யூஸரால் வேறு ஒரு டிவைஸிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் login செய்ய முடியும்.

இந்த அம்சம் யூஸர்களின் அக்கவுண்ட் மற்றும் டேட்டாக்கள் திருடப்படும் அபாயத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப் ஏற்கனவே டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது. எனினும் யூஸர்கள் தங்கள் 6-டிஜிட் பாதுகாப்புக் குறியீட்டை கவன குறைவாக மோசடி மன்னர்களுக்கு ஷேர் செய்திருந்தாலும் அவர்களை இந்த Login Approval அம்சம் பாதுகாக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.

Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்

மேலும் ஒரு மோசடி நபர் ஒரு புதிய டிவைஸிலிருந்து உங்கள் WhatsApp அக்கவுண்ட்டை அணுக முயற்சித்தால், நீங்கள் அவர்களின் லாகின் ரெக்வஸ்ட்டை மறுக்கலாம். தவிர ரெக்வஸ்ட் அனுப்பப்பட்ட நேரம் மற்றும் டிவைஸின் விவரங்கள் போன்ற பிற முக்கிய விவரங்களையும் login prompt window காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல யூஸர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை புதிய டிவைஸிற்கு மாற்ற முயற்சிக்கும் போது, இந்த பாதுகாப்பு அம்சம் தற்போதைய டிவைஸில் login prompt-ஐ காண்பிக்கும். அப்போது யூஸர்கள் டிவைஸ் ட்ரான்ஸ்ஃபர் ப்ராசஸை தொடங்க அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

First published:

Tags: Technology, Whatsapp Update