ஒரு சிலர் மெசேஜ் அனுப்புவதை விட போன் பண்ணி பேசிவிடலாம் என்று நினைப்பார்கள். அதிலும் சாதாரண அழைப்பு சுமாராக கேட்டால் வாட்ஸ் அப் கால் செய்வார்கள். அதில் அழைப்பின் தரம் மேம்பட்டு, தெளிவாக கேட்கும். அதேபோல வாட்ஸ் அப் காலை பதிவு செய்ய முடியாது என்பது கூடுதல் நன்மை.
இப்படி வாட்ஸ் அப் கால் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் செயலி கொண்டுவந்துள்ளது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து பல அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அதன் அழைப்புகள் அம்சத்தில் கவனம் செலுத்தியுள்ளது.
பயனர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள எளிதாக்கும் வகையில் புதிய அழைப்பு குறுக்குவழிகள்(shortcut ) அம்சத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சாதாரண வாய்ஸ் கால் போலவே விரைவாகவும் எளிதாகவும் அழைப்பை மேற்கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் வாட்ஸ் அப்பை திறக்காமலேயே வாட்ஸ் அப் கால்களை மேற்கொள்ள புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. அதோடு பயனர்கள் அடிக்கடி அழைக்கும் தொடர்புகளுக்கு தனிப்பயன் ஷார்ட்கட்டுகளை நாம் உருவாக்க தேவை இல்லை . அதையும் ஆப்பே உருவாக்குகிறது.
WABetaInfo இன் அறிக்கையின்படி , இப்போது காண்டாக்ட் லிஸ்டில் எப்படி வாட்ஸ் ஆப் செயலியில் எண் இருந்தால் காட்டுகிறதோ அதே போல நேரடியாக வாட்ஸ் அப் அழைப்பிற்கான ஆப்ஷனும் வந்துவிடுமாம். இதனால் வாட்ஸ் ஆப் கால் செய்ய செயலிக்குள் போகவேண்டுய அவசியம் ஏற்படாது. அதே போல அடிக்கடி பேசுபவர்களது எங்களை மட்டும் தனியாக பிரித்து அவர்களை எளிதாக அணுகும் வகையில் அவர்களது கால் ஷார்ட்கட்டை முகப்பு திரையிலேயே வாட்ஸ் ஆப் உருவாக்கி விடுகிறது. இதனால் முகப்பு திரையும் தொட்டால் போதும் சம்பந்தப்பட்ட ஆளுக்கு அழைப்பு தொடங்கிவிடும்.
புதுப்பிக்க பட்ட அம்சம் தற்போது வாட்ஸ் ஆப்பின் 2.23.3.15 பதிப்பில் உள்ளது. பீட்டா பயனாளர்களிடம் சோதனையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதாரண அழைப்பை போலவே வாட்ஸ் ஆப் அழைப்பையும் மேற்கொள்ள வைக்கும் முயற்சியாக இந்த புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WhatsApp, Whatsapp Update