குறிப்பிட்ட போன்களில் வாட்ஸ்அப் இயங்காமல் போகும் அபாயம்.. நீங்கள் செய்யவேண்டியது என்ன...?

சமீபத்தில் வெளியான போன்களாக இருந்தால் வாட்ஸ்அப் செயலிக்கு பாதிப்பில்லை. இந்த லேட்டஸ்ட் அப்டேட் மொத்தம் 14 ஐபோன் மாடல்களில் செயல்படும்.

குறிப்பிட்ட போன்களில் வாட்ஸ்அப் இயங்காமல் போகும் அபாயம்.. நீங்கள் செய்யவேண்டியது என்ன...?
வாட்ஸ்அப்
  • News18
  • Last Updated: September 30, 2019, 6:17 PM IST
  • Share this:
ஐபோன், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட குறிப்பிட்ட சில போன்களில் வருகிற பிப்ரவரி 2020 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாக உள்ளது.

ஐபோன் பயனாளர்கள் தங்களது OS அப்டேட் ஆகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் செயலி செயல் இழந்துவிடும். புதிதாகவும் வாட்ஸ்அப் கணக்கும் தொடங்க முடியாது. உங்களது ஐபோனில் iOS 8 பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் இன்னும் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே உங்களால் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் பயன்படுத்தினாலும் பிப்ரவரி 2020-க்குப் பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. ஐபோன் பயனாளர்கள் கண்டிப்பாக iOS 9 - க்கு அப்டேட் ஆகியிருக்க வேண்டும். உங்களது ஸ்மார்ட்போன் எதுவானும் லேட்டஸ்ட் அப்டேட் வைத்திருந்தால் பிரச்னையே இல்லை என விளக்குகிறது வாட்ஸ்அப்.


ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களை வெளியிட்டது. இவை அனைத்தும் iOS 13-ன் கீழ் இயங்கக்கூடிய போன்களாக உள்ளன. ஆக, சமீபத்தில் வெளியான போன்களாக இருந்தால் வாட்ஸ்அப் செயலிக்கு பாதிப்பில்லை. இந்த லேட்டஸ்ட் அப்டேட் மொத்தம் 14 ஐபோன் மாடல்களில் செயல்படும்.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வந்தது ஜியோமி ரெட்மி 8A... பட்ஜெட் விலையில் அறிமுகமானதால் நல்ல வரவேற்பு!

வங்கிக் கடனை கட்ட முடியாமல் தவிக்கும் கரும்பு விவசாயிகள்
First published: September 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்