இனி இந்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

வாட்ஸ்அப்

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் பழைய iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்துகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
2020-ம் ஆண்டு முடிவுக்கு வருவதால், பேஸ்புக்கிற்கு சொந்தமான உடனடி செய்தியிடல் பயன்பாடான Whatsapp புதிய ஆண்டிற்குள் நுழையும் போது சில பழைய Android மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவையும் முடிவுக்குக் கொண்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தது iOS 9 மற்றும் Android 4.0.3 ஆகிய OS பதிப்புகளில் இயங்காத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியின் அனைத்து அம்சங்களையும் உபயோகிக்க பயனர்கள் தங்கள் போனில் சமீபத்திய OS பதிப்பைப் பயன்படுத்துமாறு வாட்ஸ்அப்பின் சப்போர்ட் பேஜ் பரிந்துரைத்துள்ளது. மேலும் ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த iOS 9 அல்லது அதற்குப் அடுத்து உள்ள OS பயன்பாடு தேவைப்படுகிறது. 

அதேபோல ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் செயலி Android 4.0.3 மற்றும் அதன் புதிய பதிப்பு OS-ல் இயங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பழைய ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை மக்கள் அதிக அளவில் உபயோகிக்கவில்லை என்றாலும், வாட்ஸ்அப்பின் பயனர் தளம் மிகப் பெரியது. ஒரு சிறிய மக்கள்தொகை கூட ஒரு பெரிய எண்ணிக்கையாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் வரிசையைப் பொறுத்தவரை, iphone 4 வரையிலான அனைத்து ஐபோன் மாடல்களும் அடுத்த ஆண்டு வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6, மற்றும் iPhone 6S ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த அதன் ஆபரேட்டிங் சிஸ்டத்தை iOS 9 அல்லது அதற்குப் பிறகு வந்த OS- உடன் புதுப்பிக்க வேண்டும்.

அதேபோல ஆண்ட்ராய்டு போன்களை பொறுத்தவரை, 4.0.3- பதிப்பிற்கு முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். தற்போது நிறைய சாதனங்கள் Android 4.0.3 பதிப்பிற்கு முந்தைய பதிப்பில் இயங்கவில்லை. இருப்பினும், சில சாதனங்களான HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr, மற்றும் Samsung Galaxy S2 ஆகியவை பழைய பதிப்பில் இயங்குகின்றன. அந்த வகையில், பழைய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கக்கூடிய பிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 2020ம் ஆண்டு முடிவடையும் போது வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை இழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம், அதற்கு காரணம் அந்த சாதனைகளில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் புதிய புதுப்பித்தலுடன் ஒரு இணைப்பைப் பெற்றிருக்கும். இருப்பினும், பழைய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சிலருக்கு புதிய ஸ்மார்ட்போனை முழுவதுமாகப் பெறுவதே ஒரே தீர்வாக இருக்கும். அப்படியானால், உங்கள் தொலைபேசி எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதைக் கண்டறிய, ஐபோன் பயனர்கள் தங்கள் போனில் Settings > General > Information என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மென்பொருள் பதிப்பு (software updates) பற்றிய தகவல்களைக் காணலாம்.

Also read... Work From Home பிளானில் 70GB டேட்டா.. அட்டகாசமான பிளானை அறிமுகம் செய்தது BSNL..

அதேபோல ஆண்ட்ராய்டு பயனர்கள், அவர்களின் ஸ்மார்ட்போன் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்குகிறது என்பதைக் காண Settings > About Phone என்பதை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் செட்டிங்ஸ் பயன்பாட்டில், கிடைக்கக்கூடிய எந்தவொரு மென்பொருள் புதுப்பிப்புகளையும் நீங்கள் சரிபார்த்து அதனை புதுப்பித்துக்கொள்ளலாம். இது உங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் ஆதரவை நீட்டிக்கக்கூடும். மேலும் தற்போதைக்கு கொஞ்சம் பணத்தை நீங்கள் மிச்சப்படுத்தலாம்.

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் பழைய iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்துகிறது. கடந்த ஆண்டு, iOS 8 அல்லது அதற்கு முந்தைய பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தியது. மேலும் பதிப்பு 2.3.7 அல்லது அதற்கு முந்தைய பழைய ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் அதன் பயன்பாட்டை வாட்ஸ்அப் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: