• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Whatsapp-ல் உங்கள் லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ், ப்ரொஃபைல் பிக்ச்சரை யார் பார்க்கலாம் என நீங்களே தேர்வு செய்யலாம்!

Whatsapp-ல் உங்கள் லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ், ப்ரொஃபைல் பிக்ச்சரை யார் பார்க்கலாம் என நீங்களே தேர்வு செய்யலாம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வாட்ஸ்அப் யூசர்கள் தங்கள் ப்ரொஃபைல் பிக்ச்சர், ஸ்டேட்டஸ் மற்றும் லாஸ்ட் சீன் ஆகியவற்றை ஹைட் செய்ய முடியும். ஆனால் அப்படி செய்யும் போது மேற்கண்ட விவரங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் உள்ள யாருக்கும் தெரியாது.

  • Share this:
வாட்ஸ்அப் தற்போது ஒரு புதிய அம்சத்தில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் மூலம் யூசர்கள் தங்களது லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரொபைல் பிக்ச்சரை யார் பாக்கலாம் என்பதை தீர்மானிக்க முடியும். அதேபோல சில குறிப்பிட்ட காண்டாக்ட்டுகள் பார்க்காமல் இருக்கும் படி மேற்கண்டவற்றை ஹைட் செய்யவும் முடியும். பேஸ்புக்கிற்கு சொந்தமான உடனடி செய்தி ஆப்-ல் ஏற்கனவே உள்ள தனியுரிமை அம்சங்களுக்கான ஒரு நீட்டித்த அம்சமாக இது இருக்கும்.

ஏற்கனவே உள்ள அம்சத்தின்படி, வாட்ஸ்அப் யூசர்கள் தங்கள் ப்ரொஃபைல் பிக்ச்சர், ஸ்டேட்டஸ் மற்றும் லாஸ்ட் சீன் ஆகியவற்றை ஹைட் செய்ய முடியும். ஆனால் அப்படி செய்யும் போது மேற்கண்ட விவரங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. குறிப்பிட்ட காண்டாக்ட்டுகளுக்கு மட்டும் தெரியாதபடி ஹைட் செய்யும் அம்சம் முன்பு இல்லை. இப்போது, ​​வாட்ஸ்அப் புதிய தனியுரிமை அமைப்புகளைச் சோதித்து வருவதன் மூலம் இந்த பழைய அம்சம் மாற வாய்ப்புள்ளது. இது யூசர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரொஃபைல் பிக்ச்சர்களை யாரிடமிருந்து மறைக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இன் பீட்டா பதிப்புகளில் சோதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த புதிய அம்சத்தின்படி வாட்ஸ்அப் தற்போது அதன் யூசர்களுக்கு மூன்று விருப்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஸ்டேட்டஸ், ப்ரொஃபைல் பிக்ச்சர் மற்றும் லாஸ்ட் சீன் ஆகியவற்றை காட்ட "Everyone," “Nobody," மற்றும் “My Contacts." என்ற விருப்பத்தை யூசர்கள் தேர்வுசெய்யலாம். "My Contacts…Except," என்ற விருப்பம் தான் உங்களது லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரொஃபைல் பிக்ச்சரை யாரெல்லாம் பார்க்கக்கூடாது என்பதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இதுதொடர்பாக வெளியான WABetaInfo அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, வாட்ஸ்அப்பில் இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் செயலியில் தனியுரிமை அமைப்புகளில் புதிய விருப்பத்தைச் சேர்க்கும் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் எதிர்கால கட்டமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் WABetaInfo கூறியுள்ளது.

வாட்ஸ்அப் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிவித்தது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் சாட் ஹிஸ்டரியை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. அதாவது, ஒரு ஓஎஸ்ஸிலிருந்து இன்னொரு ஓஎஸ்ஸுக்கு தகவல்களை மாற்ற அனுமதிக்கும் அம்சம் தான் அது. "Chat Migration Tool" என்று அழைக்கப்படும் இந்த அம்சம் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் முன்பு தெரிவித்தாவது, இந்த சாட்- ட்ரான்ஸ்ஃபர் வசதி சாம்சங் தொலைபேசிகளான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிலிப் 3 ஆகிய மாடல்களில் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்திருந்தது. ஆனால், பிற சாம்சங் தொலைபேசிகளிலும் இந்த அம்சம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also read... விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் - முழு விவரம் இங்கே!

இந்த அம்சம் நீண்ட காலமாக சோதனை கட்டத்தில் இருந்தது. இந்த நிலையில், வாட்ஸ்அப் கடந்த வாரம் பயனர்கள் எப்படி iOS இலிருந்து ஆன்ட்ராய்டுக்கு கோப்புகளை மாற்ற முடியும் என்ற விவரங்களைப் பகிர்ந்தது. இந்த சாட் ட்ரான்ஸ்ஃபர் அம்சம் செயல்பட யூ.எஸ்.பி-சி அல்லது லைட்னிங் கேபிள் போன்றவை தேவைப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதுவே iPhone 12 ஆக இருந்தால் இணைப்புக்கு USB-C கேபிள் அவசியம் தேவை என்று கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: