ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி WhatsApp-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம் - வெளியாகும் புதிய அம்சம்

இனி WhatsApp-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம் - வெளியாகும் புதிய அம்சம்

வாட்சாப்

வாட்சாப்

வாட்டசாப்பின் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்பு 2.22.24.2 ஆனது இந்த புதிய மெசேஜ் அம்சத்தைக் கொண்டு வெளியிடப்படும் என்று செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai, India

இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாத செயலியாக வாட்ஸ் அப் மாறிவிட்டது. உலகளாவிய சமூகத்தின் தேவைகளை தீர்க்க வாராவாரம் புதிய அம்சங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அப்படி வரப்போகும் ஒரு அப்டேட் என்ன தெரியுமா?

தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதி தான் அது. தனக்கு தானே எதற்கு செய்தி அனுப்பி கொள்ள வேண்டும் என்று சிலர் யோசிக்கலாம். Telegram நிறுவனம் ஏற்கனவே இந்த சேவையை வழங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து இப்போது வாட்ஸ் அப்பிலும் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏன் என்று சொல்கிறோம்.

மனிதர்கள் எல்லாவற்றையும் தங்கள் மூளையில் சேமித்து வைத்துக்கொண்டே இருக்க முடியாது. அவசரத்தில் ஒரு எண்ணை  சேமிக்க வேண்டும் என்றாலும் பேப்பர், பேனா கையில் இருக்காது. இந்த மாதிரி சூழலில் யாராவது ஒருவருக்கு செய்தியாக அனுப்பி விட்டு பின்னர் அதை குறித்துக் கொள்வோம்.

ஹேக்கர்கள் ஜாக்கிரதை.. கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை !

இந்த மாதிரி செய்திகள் வந்தால் கண்டுகொள்ள வேண்டாம் என்று சிலரிடம் சொல்லி வைத்திருப்போம். ஒரு சிலர், சில காண்டாக்ட்களை இது போன்ற செய்திகள் அனுபவதற்காகவே வைத்திருப்பர்.அதற்கு பதிலாக இப்போது தனக்கென்று தனி ஒரு சாட் வைத்துக்கொண்டு அதற்கு அனுப்பி சேமித்துவைத்துக் கொள்ளவே இந்த புதிய அம்சம்.

டெலெக்ராமில் saved messages என்ற தலைப்புடன் அமையும் சாட்டில் தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளலாம். அது போல இப்போது வாட்ஸ் அப்பில் பயனருடைய எண் ‘me’ என்று வரும். அதில் அவர் தனது குறிப்புகளை அனுப்பி சேமித்துக் கொள்ளலாம். இது பயனர்களுக்கு பேருதவியாக இருக்கும். ஏதேனும் லிங்குகளை சேமிக்கவும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த அப்டேட்டின் விவரங்கள் WABetainfo வழியாக வெளிவந்துள்ளன. வாட்டசாப்பின் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்பு 2.22.24.2 ஆனது இந்த புதிய மெசேஜ் அம்சத்தைக் கொண்டு வெளியிடப்படும் என்று செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது.

இனி ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கும் மாதம் ரூ.1600 கட்டணம்... புதிய திட்டத்தில் எலான் மஸ்க்!

இந்த அம்சம் தற்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதில் ஏற்படும் சோதனை பிழைகள் சரி செய்யப்பட்டவுடன், Whatsapp அதை வரும் வாரங்களில் அனைவருக்கும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள அழைப்பு இணைப்புகள் அம்சம் இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது வழங்கபடுகிறது. வீடியோ மற்றும் ஆடியோ வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும் இணைப்புகளை உருவாக்க வாய்ப்பளிக்கிறது. வாட்ஸ்அப்பில் அழைப்பு இணைப்புகள் Android மற்றும் iOS பயனர்களுக்குக் கிடைக்கிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: WhatsApp, Whatsapp Update