முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update | வாட்ஸ்அப் தனது யூஸர்களுக்காக புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இன்டர்நெட் கனெக்‌ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்அப் தான். நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு உரையாடவும், ஃபோட்டோ, வீடியோ உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பி வைக்கவும், அதேபோன்று ஆவணங்களை பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ்அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானதா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. எனவே தான் வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூஸர்களின் தனியுரிமை மற்றும் பகிரப்படும் செய்திகளை பாதுகாக்கும் வண்ணம் புதுப்புது அப்டேட்களை பகிர்ந்து வருகிறது. இதன் மூலம் யூஸர்கள் தங்களது சேட்டிங்கில் அதிக கட்டுப்பாடுகளை அளிப்பதோடு, மெசேஜ்களை அனுப்பும்போது அதிக பாதுகாப்பையும் வழங்கும். சமீபத்தில் வாட்ஸ்அப்பில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் Delete for everyone என்ற ஆப்ஷன் அப்டேட் செய்யப்பட்டது.

அதன்படி குரூப் அல்லது தனி நபருக்கு அனுப்பிய செய்தியை 1 மணி நேரத்தில் மட்டுமே டெலிட் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டு, தற்போது அது 2 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டோ, வீடியோ, மெசேஜ் என எதையும் குரூப் அல்லது தனிநபருக்கு அனுப்பியதை டெலிட் செய்ய நினைத்தால் 2 நாட்கள் வரை வைத்து டெலிட் செய்யலாம்.

அதேபோல் யூஸர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் view-one எனப்படும் அம்சம் யூஸர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர அனுமதிக்கிறது. ஒருமுறை பார்த்த பிறகு மறுபடியும் அதனை பார்க்க முடியாது. ஆனால் இந்த அம்சத்தில் இருந்த ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், மக்கள் அந்த உள்ளடக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தங்கள் சாதனத்தில் சேமிக்க முடிந்தது.

Also Read : போன் ஆஃப்லைன் இருந்தாலும் இனி வாட்ஸ்அப்பை இயக்க முடியுமாம் - புதிய அப்டேட் அறிமுகம்.!

WABetainfo பகிர்ந்துள்ள தகவல்களின் படி, வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்கிரீன்ஷாட் பிளாக் அம்சம் iOS மற்றும் Android உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் பீட்டா யூஸர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூஸர்களுக்கும் கொண்டு வரப்பட உள்ளது. இது view-one முறையில் அனுப்பப்படும் மெசெஜ் அல்லது தகவல்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க அனுமதிக்காது என்றும், மீறி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயற்சிக்கும் யூஸர்களை எச்சரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : ஐபோன், ஐபேட் யூஸர்களுக்கு முக்கிய அப்டேட்... தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை.!

ஆனால் இதுபற்றி செய்தியை அனுப்பியவருக்கு எந்த அறிவிப்பும் செல்லாது. இதன் மூலம் யூஸர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளதை வாட்ஸ்அப் சுட்டிக்காட்டியுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான இயங்குதளமான வாட்ஸ்அப் வரும் வாரங்களில் இன்னும் சில முக்கிய அப்டேட்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Technology, Whatsapp Update