ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப் குரூப்களுக்கு நோட்டிஃபிகேஷன் நிறுத்தப்படுகிறதா.?

வாட்ஸ்அப் குரூப்களுக்கு நோட்டிஃபிகேஷன் நிறுத்தப்படுகிறதா.?

வாட்ஸ்அப் குரூப்

வாட்ஸ்அப் குரூப்

WhatsApp Group Update | வாட்ஸ்அப் குரூப் நமக்கு பலனுள்ளதாக அமைகின்ற அதே வேளையில், நம்மை தொந்தரவு செய்யும் விதமாக நோட்டிஃபிகேஷன் வந்து குவிந்துவிடும் என்பதை மறுக்க இயலாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாதாரணமாக நம் ஃபோனில் உள்ள மெசேஜிங் ஆப் மூலமாக இருவர் இடையே மற்றுமே தகவல் பரிமாற்றம் நிகழ்த்த முடியும். அத்துடன் அதில், வீடியோ, டாக்குமெண்ட் போன்றவற்றை அனுப்ப முடியாது. ஆனால், வாட்ஸஅப் என்ற மெசேஜிங் ஆப் சகல வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது.

நீங்கள் ஃபோட்டோ, வீடியோ, டாக்குமெண்ட் போன்ற எதுவொன்றையும் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒரு சமயத்தில் ஒருவரோடு மட்டுமல்ல, 250க்கு மேற்பட்டோருடன் உரையாடலாம். வாட்ஸ்அப் குரூப்கள் இந்த வசதியை நமக்கு பல ஆண்டுகளாக அளித்து வருகின்றன.

வாட்ஸ்அப் குரூப் நமக்கு பலனுள்ளதாக அமைகின்ற அதே வேளையில், நம்மை தொந்தரவு செய்யும் விதமாக நோட்டிஃபிகேஷன் வந்து குவிந்துவிடும் என்பதை மறுக்க இயலாது.

இந்த தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, நாம் ஒவ்வொரு குரூப்பிலும் பிரத்யேகமாக மியூட் ஆப்சனை ஆன் செய்து வைக்க வேண்டும். சில சமயம், நாம் நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்ய தவறி விடுகிறோம் என்றால், மழைபோல குவிந்து நிற்கும்.

அதிலும், தற்போது வாட்ஸ்அப் குரூப்களில் 1,024 உறுப்பினர்கள் வரையிலும் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், யூசர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாட்ஸ்அப்-ஐ நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் கருதுகிறது. இதனால், 256க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குரூப்களுக்கு இயல்பாகவே நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்வது குறித்து அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

Also Read : இன்ஸ்டாவில் ரீல்ஸ் ரொம்ப தொந்தரவா இருக்கா..? போட்டோ மட்டும் பார்க்கணுமா? இந்த ஆப்ஸ் யூஸ் பண்ணுங்க..

தற்போது ப்ரீமியம் யூசர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டு வருகிறது. சோதனையின் முடிவில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அடுத்தக் கட்டமாக அனைத்து வாட்ஸ்அப் யூசர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

வாட்ஸ்அப் இந்த ஒரு வசதியை மட்டுமல்லாமல், அவ்வபோது தேவைக்கு ஏற்ப பல வசதிகளை பரிசோதனை செய்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது நீங்கள் அனுப்புகின்ற மெசேஜ் ஒன்றில் ஏதேனும் தவறு இருந்தால், அதை நீங்கள் திருத்த முடியாது என்ற சூழல் இருந்து வருகிறது. ஆனால், மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்கள் வரையிலும் அதில் திருத்தங்கள் செய்வதற்கான ஆப்ஷன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

Also Read : ட்விட்டருக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் டாப் 5 ஆப்ஸ்கள்!

ஆனால், நீங்கள் திருத்தம் செய்துள்ளீர்கள் என்பது மற்றவர்களுக்கும் தெரிய வரும். ஏனெனில், எடிட்டெட் என்ற அடையாளத்தை அந்த மெசேஜ்களுக்கு வாட்ஸ்அப் வழங்கிவிடும். எனினும், தற்போதைய சூழலில், டைப்போ எரர் காரணமாக, நம்முடைய கருத்துகளை அல்லது செய்தியை பிறர் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலை காணப்படுகிறது. சில சமயம், நீங்கள் புதிய விளக்கம் கூட கொடுக்க வேண்டியிருக்கும். இந்த எடிட் ஆப்ஷன் வரும் பட்சத்தில் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக அமையும் என்று கருதப்படுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Technology, Whatsapp Update