ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப்பின் அடுத்த அசத்தலான அப்டேட்... இனி உயர்தர போட்டோவை ஈஸியா அனுப்பலாம்

வாட்ஸ்அப்பின் அடுத்த அசத்தலான அப்டேட்... இனி உயர்தர போட்டோவை ஈஸியா அனுப்பலாம்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whats app update on image quality | ஒவ்வொரு படம் அனுப்பும் போதும் மேலே செட்டிங் என்ற புது ஆப்ஷன் மூலம் தரத்தை மாற்றிக்கொள்ளலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  படங்கள் , வீடியோக்கள், எழுத்துக்களை மட்டும் ஸ்டேட்டஸ் ஆக வைத்து வந்த பயனாளர்களை குரல் பதிவுகளை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய அம்சத்தை கடந்த வாரம் கொண்டுவந்தது. பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வர இருக்கும் நிலையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. படங்களை பகிர அதிகப்படியான மக்கள் வாட்சாப்பை தான்  பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாதாரணமாக படங்களை அனுப்பும் போது படங்கள் தானாக தரம் குறைக்கப்பட்டு குறைந்த பிக்சல் அளவோடு சென்றடையும்.

இந்த அம்சத்தால் டேட்டா பயன்பாடு குறையும் என்றாலும் ஒரு சில நேரங்களில் முக்கிய படங்களின் தரம் கெட்டுவிடும். தரம் குறையாமல் படத்தை அனுப்ப பயனர்கள் தற்போது படங்களை டாக்குமெண்ட்டாக அனுப்பி வருகின்றனர். டாக்குமெண்ட்டாக அனுப்பும் போது அதன் தரமும் அளவும் குறையாமல் இருக்கும். IOS பயனாளர்கள்  இப்படி டாக்குமெண்ட்டாக அனுப்புவதில் சில  சிக்கல்கள் உள்ளது. அதனால் வாட்சாப் நிறுவனம் புதிய ஒரு அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதன்படி படங்களை அனுப்பும் போது எந்த தரத்தில் அனுப்பவேண்டும் என்பதை பயனர்களே தேர்வு செய்து அனுப்பலாம்.

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.21.15.7 இல் 3 புகைப்பட தர விருப்பங்களை சோதனை செய்து வருகிறது. அதில் ஆட்டோமேட்டிக், சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் தரம் என்ற மூன்று விருப்பங்களை கேட்கும். இதில் சிறந்த தரம் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் ஏறத்தாழ அசல் தரத்தில் அனுப்பப்படும்.டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் அடிமட்ட தரத்தில் அனுப்பப்படும்.

இந்த அம்சம் யாருக்கு கிடைக்கும்?

இந்த அம்சத்தை தற்போது பீட்டா பயனாளர்களுக்கு வழங்கி சோதனை செய்து வருகிறது. சில நாட்களில் இது அனைவருக்கும் கொண்டுவரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்கே இருக்கும் இந்த ஆப்ஷன்?

படங்களை டாக்குமென்ட்டாக அனுப்பாமல் அதே நேர சிறந்த தரத்தில் அனுப்ப பெரும் உதவியாக இருக்கும் இந்த விருப்ப தேர்வு ஒவ்வொரு படம் அனுப்பும் போதும் மேலே செட்டிங் என்ற புது ஆப்ஷன் மூலம் செயல்படும். அதை தேர்ந்தெடுத்தால் படத்தை 3 தரத்தில் எதில் அனுப்பவேண்டும் என்று கேட்கும். தரத்தை தேர்ந்தெடுத்து நொடிகளில் அனுப்பி விடலாம்.

எந்த படத்தை எந்த தரத்தில் அனுப்ப வேண்டும் என்பதை அனுப்பும் போது மாற்றிக்கொள்ளலாம். இதற்காக போது செட்டிங்கில் சென்று மற்ற வேண்டிய அவசியம் இல்லை.

First published:

Tags: WhatsApp, Whatsapp Update