வைரல் பதிவுகளை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் திட்டம்!

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் மக்கள் கட்டாயம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவராக உள்ள நிலையில், போலி செய்திகளையும் வதந்திகளையும் எந்தவித ஆய்வும் செய்யாமல் அப்படியே ஷேர் செய்வதால், பல விபரீதங்கள் நிகழ்கின்றன.

news18
Updated: March 13, 2019, 5:04 PM IST
வைரல் பதிவுகளை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் திட்டம்!
வாட்ஸ்அப்
news18
Updated: March 13, 2019, 5:04 PM IST
வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் பதிவுகளை தொழில்நுட்ப ரீதியாக மேலும் கட்டுப்படுத்த வாட்ஸப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தவறான தகவல்களும் போலி செய்திகளும் வாட்ஸ்அப்பில் வைரல் எனும் பேரில் காட்டுத் தீயாய் அதிவிரைவில் பரவுகின்றன.

இதனால், இந்தியா முழுவதும் நிறைய பாதிப்புகளும், வன்முறைகளும் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க வாட்ஸ்அப் சார்பில் பல தொழில்நுட்ப கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.


ஆனாலும், வைரல் பதிவுகளை வாட்ஸ்அப் நிறுவனத்தால் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில், எதிர்மறையான வைரல் பதிவுகளை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வரவுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்திய தலைவர் அபிஜித் போஸ், இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.

முன்னதாக 5 பேருக்கு மட்டுமே வாட்ஸ்அப் பதிவுகளை ஷேர் செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அமல்படுத்தியது.

Loading...

ஆனபோதும், வாட்ஸ்அப் தகவல்கள் வைரலாக பரவுவதை அந்நிறுவனத்தால் தடுக்க இயலவில்லை.

சமீபத்தில் வாட்ஸப் குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், 70 சதவீத மக்கள் வாட்ஸ்அப் மூலம் தங்களது சிறு குறு தொழில்களை மேம்படுத்த வாட்ஸ்அப் -ஐ பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் மக்கள் கட்டாயம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவராக உள்ள நிலையில், போலி செய்திகளையும் வதந்திகளையும் எந்தவித ஆய்வும் செய்யாமல் அப்படியே ஷேர் செய்வதால், பல விபரீதங்கள் நிகழ்கின்றன.

மத்திய அரசும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இதுகுறித்து பல அழுத்தங்களையும் கொடுத்து வரும் நிலையில், புதிய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் முயற்சியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளதாக அபிஜித் போஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also see:

First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...