அடுத்த வருடத்திலிருந்து இந்த போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது...

அடுத்த வருடத்திலிருந்து இந்த போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது...

வாட்ஸ் ஆப்

2021 ம் வருடம் குறிப்பிட்ட சில போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  ஃபேஸ்புக்குக்கு அடுத்த படியாக பலரும் வாட்ஸ் ஆப்பைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தெரியாத நபர்களையும் நண்பர்களாக இணைக்கும் வசதி முகநூலில் இருந்தாலும் வாட்ஸ் ஆப் பலருக்கும் முக்கிய நட்பு வட்டாரங்களை மட்டுமே வைத்துக்கொள்ளும் படி அமைந்துள்ளது. மற்ற ஆப்களை காட்டிலும் இதனை பயன்படுத்துவது பாதுகாப்பு நிறைந்த ஒன்றாக உள்ளது.

  வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடர்ந்து பல சிறப்பம்சங்களை அதன் பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் ஆப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  குறிப்பிட்ட சில ஃபோன்களில், 2021 ஆம் ஆண்டிலிருந்து வாட்ஸ்அப் செயலி செயல்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 4.0.3 விற்கு முந்தைய வெர்ஷன்களை கொண்ட ஆண்ட்ராய்டு ஃபோன்களில், அடுத்த ஆண்டிலிருந்து வாட்ஸ்அப் செயலி செயல்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபோன் 4, 5, 5s, 6, 6 s வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த தங்களது ஐபோன் வெர்ஷனை அப்டேட் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கு முன்னதாக நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் மெசேஜ்கள் 7 நாட்களுக்கு பின்னர் தானாகவே டெலீட் செய்யப்படும் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்தது. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் வேண்டுமென்றால் செட்டிங்ஸ் சென்று இந்த வசதியை ஆன் செய்து கொள்ளலாம்.

   

      

  வேண்டாம் என்றால் பயன்படுத்தத் தேவை இல்லை எனவும் தெரிவித்திருந்தது.இதற்கு வாட்ஸ் ஆப்பில் Settings > Storage and Data > Manage Storage சென்று இந்த வசதியைப் பெற வேண்டும்.என இது தெடர்பான வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

  இந்த வசதி நடைமுறைக்கு வந்த நிலையில், PAYTM, GOOGLE PAY போன்று, வாட்ஸ் ஆப் PAY சேவை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது.சிலருக்கு மட்டுமே நடைமுறையில் வந்துள்ள இந்த அப்டேட் விரைவில் அனைவரது வாட்ஸ்அப்களிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக கூறியிருந்தது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: