• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ்அப் வெப் அப்டேட் - 3 முக்கிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ்அப் வெப் அப்டேட் - 3 முக்கிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ்அப் வெப் அப்டேட்

வாட்ஸ்அப் வெப் அப்டேட்

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவேளையில் வாட்ஸ்அப் செயலி சில முக்கிய அப்டேட்களை தருவது வழக்கம்.

  • Share this:
உடனடி மெசேஜ் வசதி கொண்ட செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உலக அளவில் 2 பில்லியன் யூசர் பயன்படுத்த கூடிய வாட்ஸ்அப் செயலியின் தேவை பல்வேறு வகையில் பெருகி உள்ளது. வாட்ஸ்அப் செயலி பல தரப்பு மக்களுக்கு எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் உள்ளதால் அனைவருக்கும் பிடித்தமான செயலியாக விளங்குகிறது. இதில் தரப்பட்டுள்ள ஸ்டேட்டஸ் வசதி, ஸ்டிக்கர்ஸ், தரமான வீடியோ - ஆடியோ காலிங் வசதி, வாட்ஸ்அப் வெப், எமோஜிகள் போன்ற முக்கிய அம்சங்கள் தான் இந்த அளவிற்கு வாட்ஸ்அப் பிரபலமாவதற்கு காரணம்.

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவேளையில் வாட்ஸ்அப் செயலி சில முக்கிய அப்டேட்களை தருவது வழக்கம். அந்த வரிசையில் பிரவுசரில் பயன்படுத்த கூடிய வாட்ஸ்அப் வெப் அம்சத்தில் 3 புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக் (தற்போது 'மெட்டா' என பெயரிடப்பட்டுள்ளது) தெரிவித்துள்ளது.

தனக்கு வரும் மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட் போனை திறந்து பார்க்க வேண்டிய தேவையை குறைத்ததே இந்த வாட்ஸ்அப் வெப் தான். குறிப்பாக அலுவலக பணி செய்வோருக்கு இந்த வாட்ஸ்அப் வெப் மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆரம்பத்தில் இதில் வெறும் மெசேஜ்களை பார்க்கவும், அதற்கு பதிலளிக்கும் வசதி மட்டுமே இருந்தது. பிறகு சில அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்தது. அந்த வகையில் தற்போது மீண்டும் 3 முக்கிய அப்டேட்களை வாட்ஸ்அப் வெப்பில் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் தற்போது நீங்கள் பகிரக் கூடிய போட்டோக்களில் உங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை நீங்கள் சேர்த்து கொள்ளலாம். மற்றும் போட்டோவை கிராப் செய்யும் வசதியும் இதில் தந்துள்ளனர். இப்படி எடிட் செய்த போட்டோக்களை உங்கள் கணினியில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

உங்களுக்கு பிடித்தமான எண்ணற்ற ஸ்டிக்கர்களை பகிரக்கூடிய வசதியும் இந்த அப்டேட்டில் தந்துள்ளனர். எனவே இனி எந்த ஸ்டிக்கரை யார் வேண்டுமானாலும் சேமித்து கொண்டு அதை உங்கள் நன்பர்கள்/உறவினர்களுக்கு அனுப்பலாம். மேலும் எமோஜிகளும் இம்முறை அப்டேட்களுடன் வருகின்றன. உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் மற்றும் எமோஜியை டைப் செய்வதன் மூலமும் இவற்றை நீங்கள் பரிந்துரையாக பெறலாம்.

Also read... வாட்ஸ்அப்பின் "delete for everyone" அம்சத்தில் வர உள்ள மாற்றம் - வெளியான புதிய தகவல்!

இந்த புதிய அப்டேட்டில் நீங்கள் பகிரும் லிங்க்-களுக்கு பிரிவியூவ் காட்டும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக செய்திகள், வீடியோக்கள், ட்விட்டர் பதிவுகள் போன்றவற்றை பகிரும்போது அதில் பிரிவியூவ் காட்டப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சில பிழைகளை இந்த அப்டேட்டில் சரிசெய்துள்ளது. இந்த புதிய அப்டேட்கள் பற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் நவம்பர் 1 ஆம் தேதி அன்று பதிவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் தனது சேவையை ஆண்ட்ராய்டு 4.0.3 மற்றும் iOS 9 ஆகிய இயங்கு தளத்தை கொண்ட மொபைல்களில் நிறுத்தியுள்ளது. மேலும் ஒரு சில மாடல் மொபைல்களில் இனி வாட்ஸ்ஆப் இயங்காது என இந்த செயலியின் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக் (மெட்டா) தகவல் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: