Whatsapp Update: இனி வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் ஆப்பிலும் போட்டோக்களை எடிட் செய்யலாம்!

Whatsapp

வாட்ஸ்அப் தனது வெப் மற்றும் டெஸ்க்டாப் செயலியை புதிய போட்டோ எடிட்டிங் கருவிகளுடன் மேம்படுத்தியுள்ளது.

  • Share this:
ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வாட்ஸ்அப் செயலியில் போட்டோ எடிட்டிங் கருவியை பயன்படுத்தி, யூசர்கள் போட்டோவில் ஈமோஜி, ஸ்டிக்கர்கள் மற்றும் டெக்ஸ்ட்டுகளை சேர்க்கலாம்.

துரதிஷ்டவசமாக, வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் ஆப், கருப்பு மற்றும் வெள்ளை மற்றும் குரோம் உள்ளிட்டவற்றை கொண்ட பில்டர்களை புகைப்படங்களில் சேர்க்கும் திறனை இப்போதுவரை வழங்கவில்லை.

கூடுதலாக, வீடியோக்களை ஒழுங்கமைக்க வாட்ஸ்அப் வெப்பில் வீடியோக்களை எடிட் செய்யும் வசதியை யூசர்கள் இன்னும் பெறவில்லை. இந்த நிலையில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி இப்போது டெஸ்க்டாப் ஆப் மற்றும் வெப் பிரவுசரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சந்தை பெற யூசர்கள் தங்கள் வெப் பிரவுசரின் சமீபத்திய வெர்ஷனை பயன்படுத்த வேண்டும். மேலும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியில் "Drawing tools" என்ற விருப்பத்தை பயன்படுத்தி போட்டோ எடிட்டிங் டூலை யூசர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ |  ரூ. 449 ப்ரீபெய்ட் பிளானில் மாற்றங்கள் செய்துள்ள vi - தினமும் கூடுதல் டேட்டா!

கூடுதலாக, வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.21.16.10 ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான உடனடி செய்தி பயன்பாட்டில் புதிய ஈமோஜிகளைச் சேர்க்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே இது குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்த புதிய அம்சம் iOS ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

போட்டோ கருவியின் பயன்பாட்டை பொறுத்தவரை, யூசர்கள் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியவுடன் வாட்ஸ்அப் பக்கத்தின் மேலே தெரியும் நியூ ட்ராயிங் அல்லது எடிட்டிங் டூல்களை தேர்வு செய்து எடிட் செய்யலாம். மேலும் புகைப்படங்களை க்ராப்பிங் செய்யும் டூல் மற்றும் அண்டூ-ஷார்ட்கட் டூல் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். வாட்ஸ்அப் ஸ்னாப்சாட்-இன்ஸ்பையர்டு வியூ ஒன்ஸ் மற்றும் ஆர்ச்சிவ் சாட்ஸ் 2.0 ஐ ஆப்பில் இணைத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த சமீபத்திய எடிட்டிங் வளர்ச்சி அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ALSO READ |  பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க.. பிரபல வங்கியில் மாறிய ரூல்ஸ்!

பெயர் குறிப்பிடுவது போல் வியூ ஒன்ஸ் ஆப்ஷன், ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பிறருக்கு அனுப்ப யூசர்களை அனுமதிக்கிறது. அதன்படி எண்டு யூசர் வீடியோ அல்லது போட்டோ பைல்களை ஓபன் செய்தவுடன் அந்த பைல் உடனடியாக மறைந்துவிடும். அதேசமயம், மேம்படுத்தப்பட்ட ஆர்ச்சிவ் சாட்ஸ் யூசர்களை எப்போதும் சாட் ஹிஸ்டரியை ஆர்ச்சிவ் செய்ய அனுமதிக்கிறது.

முன்னதாக, ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்களில் இருந்து புதிய செய்திகளைப் பெற்ற பிறகு அந்த சாட் சாதாரண விண்டோக்களுக்கு மாற்றப்படும். ஆனால் இப்போது அப்படி இருக்காது. மேலும் இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்பாத யூசர்கள் வாட்ஸ்அப்பின் செட்டிங்ஸ் விருப்பத்திற்கு சென்று அதில் சாட்ஸ் என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

ALSO READ |  ஜியோமார்ட் டிஜிட்டல்: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு சவால் அளிக்க களத்தில் இறங்கும் ரிலையன்ஸ்

இந்த புதிய அப்டேட்டுகள் தொடர்பாக வெளியான தனி அறிக்கையில், வாட்ஸ்அப் பீட்டா செயலி கூகுள் ப்ளே பீட்டா புரோகிராமில் 2.21.16.10 வெர்ஷனுக்கு புதுப்பிக்கப்பட்டது, மேலும் இது பல புதிய ஈமோஜிகளைக் கொண்டு வருகிறது என்று WABetaInfo கூறியிருந்தது. இந்த புதிய ஈமோஜிகள் ஆப்பிள் நிறுவனத்தால் ஏப்ரல் 14 இல் iOS 14.5 உடன் வெளியிடப்பட்டது. வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பயனர்கள் விரைவில் இந்த ஈமோஜிகளின் நிலையான வெளியீட்டை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: