இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்வீஸான வாட்ஸ்அப் தனது யூஸர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல அப்டேட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாய்ஸ் மெசேஜ்களை யூஸர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன் அவற்றை ப்ரிவ்யூ செய்ய அனுமதிக்கும் voice message preview feature என்ற அம்சத்தை WhatsApp சமீபத்தில் அறிவித்து உள்ளது. இந்த புதிய அம்சம் யூஸர்கள் தங்கள் வாய்ஸ் நோட்ஸை ரெக்கார்ட் செய்து அனுப்பும் முன் அதை ஒருமுறை அவர்கள் கேட்க உதவும். குறிப்பிட்ட நபர்கள் அல்லது குரூப்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் தங்கள் வாய்ஸ் மெசேஜ் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து விட்டு பின்னர் அதை ஷேர் செய்யலாம்.
ஒருவேளை தாங்கள் ரெக்கார்ட் செய்த வாய்ஸ் மெசேஜ் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் உடனடியாக அதை நிராகரித்து விட்டு, வேறு புதிய வாய்ஸ் நோட்ஸை யூஸர்கள் ரெக்கார்ட் செய்து அனுப்பி கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் voice message preview அம்சம் தனிப்பட்ட தொடர்பு மற்றும் குரூப் சேட்கள் என இரண்டிலும் வேலை செய்கிறது. மேலும், இது ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ், வெப் மற்றும் டெஸ்க்டாப்கள் உட்பட அனைத்து பிளாட்ஃபார்ம்களுக்கும் சேர்த்தே வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்கள் துவங்கி இந்த அம்சம் மெதுவாக வெளிவருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்த புதிய அம்சம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த voice message preview அம்சம் யூஸர்கள் தங்கள் வாய்ஸ் மெசேஜை ஷேர் செய்வதற்கு முன் முன்னோட்டமிட உதவும் அதே நேரத்தில், மெசேஜை ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கும் போது இடையிலேயே pause செய்ய முடியாது. யூஸர்கள் எப்போதும் போலவே இடைநிறுத்தாமல் ஒரே நேரத்தில் தங்கள் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்ய வேண்டும்.
அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
மொபைலில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் சேட்டில் இருக்கும் மைக்ரோஃபோன் பட்டனை அழுத்தி, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ரெக்கார்டிங்கை லாக் செய்ய அதை மேலே ஸ்லைடு செய்ய வேண்டும். இதன் பின் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் ஆக துவங்கி புதிதாக நீங்கள் ஒரு இன்டர்ஃபேஸை காண்பீர்கள். அதில் இடப்பக்கம் ஒரு ட்ராஷ் பாக்ஸ், வலதுபக்கம் வாய்ஸ் மெசேஜை அனுப்புவதற்கான வழக்கமான ஐகான், நடுவே ரெட் கலரில் வாய்ஸ் மெசேஜை ஸ்டாப் செய்வதற்கான பட்டன் உள்ளிட்டவற்றை நாம் பார்க்கலாம்.
Also read... உங்கள் ப்ரைவசியில் ஊடுருவும் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களை பிளாக் செய்யும் WhatsApp.... புதிய அம்சம் அறிமுகம்!
உங்கள் வாய்ஸ் மெசேஜ் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்க்க இப்போது நடுவில் இருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினால் குறிப்பிட்ட வாய்ஸ் மெசேஜை ப்ளே செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும். மெசேஜ் ஓகே என்றால் வலது பக்கம் இருக்கும் வழக்கமான ஐகானை அழுத்தி ஷேர் செய்யலாம். மெசேஜில் திருப்தி இல்லை என்றால் இடதுபக்கம் இருக்கும் ட்ராஷ் பாக்ஸை அழுத்தினால் உடனடியாக அந்த மெசேஜ் ரிமூவ் ஆகி மீண்டும் புதிய வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் ஆப்ஷன் தோன்றும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WhatsApp