ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப் யூசர்களை குறிவைக்கும் புதிய பண மோசடி

வாட்ஸ்அப் யூசர்களை குறிவைக்கும் புதிய பண மோசடி

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

WhatsApp Hack : ஆன்லைன் ஹேக்கர்கள், டிஜிட்டல் ஸ்பாம்கள் என்று பலவிதமான பண மோசடிகள் அதிகரித்துள்ளன.  சமீபத்தில் வாட்ஸ்அப் யூஸர்களை குறிவைத்து ஒரு புதிய ஸ்கேம் வழியாக பணம் பறிக்கும் கும்பல் உருவாகி உள்ளது என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பண மோசடிகள் எல்லா காலங்களிலும் நடந்து வருகிறது. காலம் மாறுவதற்கு ஏற்றவாறு மோசடிகளின் முறைகளும் மாறி வருகின்றன. தற்பொழுது உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் ஆன்லைன் ஹேக்கர்கள், டிஜிட்டல் ஸ்பாம்கள் என்று பலவிதமான பண மோசடிகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் வாட்ஸ்அப் யூஸர்களை குறிவைத்து ஒரு புதிய ஸ்கேம் வழியாக பணம் பறிக்கும் கும்பல் உருவாகி உள்ளது என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் என்று அறியப்பட்டிருந்த, தற்போது மெட்டா என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கும் தலைமை நிறுவனங்களில் ஒன்று தான் வாட்ஸ்அப். கோடிக்கணக்கானவர்கள், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுத்தி வரும் இந்த மெசேஜிங் ஆப்பில், மிகப்பெரிய அளவுக்கு பண மோசடிகள் நடந்து வருகிறது. அவ்வபோது செயலியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாட்ஸ்அப் செய்திகள், உங்கள் சாட் என்று அனைத்துமே என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், ஆன்லைன் ஹேக்கர்கள் மற்றும் மோசடி நபர்கள் தற்போது வாட்ஸப்பை குறிவைத்து உள்ளனர்.

ஒரு செயலியை பயன்படுத்தும் போது எவ்வளவு  பாதுகாப்பான வரைமுறைகளை மேற்கொண்டாலும், அதை உடைத்து மக்களை ஏமாற்றும் அளவுக்கும் சைபர் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மோசடிகளும் மிகவும் நம்பத்தகுந்த வகையில் காணப்படுகின்றன. நான் உங்கள் மகன் / மகள், எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்ற வாட்ஸ்அப் செய்தி மூலம் பணம் பறிக்கும் வேலை சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

ALSO READ |  வாட்ஸ்அப்-ன் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சம் இனி எல்லா புதிய சாட்களுக்கு டிஃபால்ட்டாக மாறலாம்!!

ஹலோ அம்மா அல்லது ஹலோ அப்பா என்ற மெசேஜைத் தொடர்ந்து, அவசரம் என்பதைக் குறிக்கும் SOS என்னும் குறிச்சொல்லை அனுப்பி மகன் அல்லது மகள் போர்வையில் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்ற செய்தியை மோசடி கும்பல் அனுப்புகிறது. என்ன அவசரமோ என்று பதறும் பெற்றோர்கள் அவர்கள் கேட்கும் பணத்தை உடனடியாக அனுப்பி விடுகிறார்கள்.

இவ்வகையில், இந்திய ரூபாயின் மதிப்பில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை அப்பாவி நபர்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி செய்யும் ஒவ்வொரு நபரும் சிறிய தொகையைக் கூறுவதால், சந்தேகம் எழவில்லை. ஆனால், ஒரே ஒரு நபர் மட்டுமே தன்னுடைய மகனுக்கு நிஜமாகவே உதவி தேவைப்படுகிறது என்பதை நம்பி சில நாட்களுக்கு முன் கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

ALSO READ |  பிரபலமான 3 iPad மாடல்களை 2022-ல் புதுப்பிக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்

இங்கிலாந்தில் அதிகமாக நடந்து வரும் வாட்ஸ்அப் பண மோசடி, இந்தியாவிலும் வேறு விதமாக காணப்படுகிறது. பண மோசடி கும்பல் உங்களின் நெருக்கமான உறவினராக, சகோதர / சகோதரியாக. மகனாக அல்லது மகளாக அல்லது நண்பராக தன்னைக் காட்டிக்கொண்டு பண நெருக்கடியில் இருக்கிறேன், ஆபத்தில் இருக்கிறேன் என்று ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி மக்களை ஏமாற்றி பணம் பெற்று வருகிறார்கள். எனவே நீங்கள் இதைப் போன்ற அவசரகால உதவி என்று வரும் செய்திகளை நன்றாக விசாரித்து பார்த்த பின்பு உதவி செய்யுங்கள்.

First published:

Tags: WhatsApp, Whatsapp Update