ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ள WhatsApp - இதை செய்யாவிடில் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும்!

சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ள WhatsApp - இதை செய்யாவிடில் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சமீபத்திய அப்டேட்டுக்கு முன்னர், ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு தங்கள் வாட்ஸ்அப் கணக்குத் தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதைத் தேர்வு செய்யும் விருப்பம் வழங்கப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கையில் (privacy policy) மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது. பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் (Terms of Service), தனியுரிமைக் கொள்கையையும் (privacy policy) புதுப்பித்து வருவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த செய்தி Android மற்றும் iOS பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாற்றங்களைப் பொறுத்தவரை, வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பயன்பாடு பயனர் தரவை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் கையாளுகிறது என்பதற்கான கூடுதல் தகவல்களை வழங்குகிறது. 

இந்த ஆப் மூலம் துல்லியமான தரவு சேகரிப்பு குறித்த விவரங்களை வழங்க பரிவர்த்தனைகள் (Transactions) மற்றும் பேமெண்ட் (Payments) தரவு மற்றும் இருப்பிட தகவல் உள்ளிட்ட புதிய பிரிவுகளும் உள்ளன. வாட்ஸ்அப் தனது செய்தியிடல் ஆப் மூலம் நடைபெறும் வணிக தொடர்புகள் (Business Interactions) குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் சேர்த்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த விதிமுறைகளையும் மாற்றங்களையும் ஏற்க (Accept) வேண்டும். 

இதன் பொருள் ஒரு பயனர் புதிய மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், அவர்கள் பயன்பாட்டிற்கான அணுகலை இழக்க நேரிடும். இந்த புதிய தனியுரிமை விதிகளின் கட்டாய தன்மையை ஆரம்பத்தில் டிராக்கர் WABetaInfo மூலம் டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் இரண்டிலும் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்னவென்றால் பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் வாட்ஸ்அப் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்பதை குறிக்கிறது.

Also read... OnePlus ஸ்மார்ட்போனில் புதிய அப்டேட் அறிவிப்பு

இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பிற பேஸ்புக் நிறுவனங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் உங்கள் கணக்கு பதிவு தகவல் (அதாவது தொலைபேசி எண் போன்றவை), பரிவர்த்தனை தரவு, சேவை தொடர்பான தகவல்கள், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது மற்றவர்களுடன் (வணிகங்கள் உட்பட) நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள், மொபைல் சாதனத் தகவல், உங்கள் IP அட்ரஸ், மற்றும் 'நாங்கள் சேகரிக்கும் தகவல்' (Information We Collect) என்ற தலைப்பில் தனியுரிமைக் கொள்கை பிரிவில் அடையாளம் காணப்பட்ட அல்லது உங்களுக்கு அறிவிக்கப்பட்டபின் அல்லது உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் பெறப்பட்ட பிற தகவல்கலும் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய அப்டேட்டுக்கு முன்னர், ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு தங்கள் வாட்ஸ்அப் கணக்குத் தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதைத் தேர்வு செய்யும் விருப்பம் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை அப்படி இருக்காது எனத் தெரிகிறது. இதேபோல, வாட்ஸ்அப் தனது வலைத்தளத்தையும் புதுப்பித்துள்ளது. இது சரியாக என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது பற்றிய விரிவான தகவல்களை மக்களுக்கு வழங்குகிறது. நிறுவனம் செய்த பல மாற்றங்களில் ஒன்று, அது சேகரிக்கும் தகவலுடன் தொடர்புடையது. ஒரு பயனர் ஏதேனும் ஒரு அரட்டையில் மீடியா பைலை அனுப்பும்போது, கூடுதல் முன்னோக்குகளை திறம்பட வழங்குவதற்கு அந்த ஊடகத்தை தற்காலிகமாக மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் எங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கிறோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Whatsapp Update