DARK MODE அறிமுகம்: இனி இரவில் கண் கூசாமல் வாட்ஸ் அப் யூஸ் பண்ணலாம்!

தவறான செய்தியை அனுப்பிவிட்டால் அதனை டெலிட் செய்யும் வசதி தற்போது இருக்கும் நிலையில், அதில் மேலும் ஒரு வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

DARK MODE அறிமுகம்: இனி இரவில் கண் கூசாமல் வாட்ஸ் அப் யூஸ் பண்ணலாம்!
வாட்ஸ் அப்
  • News18
  • Last Updated: October 15, 2018, 10:55 AM IST
  • Share this:
குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் அப், மேம்பட்ட வசதிகளுடன் புதிது புதிதாக பல்வேறு வசதிகளை அடுத்தடுத்து பயனாளர்களுக்காக கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘டார்க் மோட்’ மற்றும் மெசேஜ்ஜை தவறாக யாருக்கும் அனுப்பி விட்டால் அதில் டெலிட் செய்யும் வசதியில் மேலும் சில அப்டேட்கள் விரைவில் வெளிவர உள்ளன.

தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப்பை தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன் பேர் உபயோகித்து வருகின்றனர். சந்தையில் தனக்கென மதிப்பை தக்க வைக்கப்பதற்காக, பயனாளர்களின் வசதிக்காக புதுப்புது ஐடியாக்களை வாட்ஸ் அப் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில், மேலும் சில புதிய வசதிகளை வாட்ஸ் அப் இணைக்க உள்ளது. இதற்கான் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

நாம் அனுப்பிய மெசேஜ்ஜை டெலிட் செய்யும் வசதி சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தெரியாமல் யாருக்கும் தவறான மெசேஜ்ஜை அனுப்பி விட்டால் உடனே டெலிட் செய்து விடலாம். இந்த வசதி பயனாளர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், அதில் மேலும் ஒரு அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.


அதாவது ஒரு மெஜேச்சை தவறாக அனுப்பி விடால் அதனை 1 மணி நேரம், 8 நிமிடம், 16 விநாடிக்குள் டெலிட் செய்து விட்டால் பெறுநரால் அந்த மெசேஜ்ஜை பார்க்க இயலாது. டெலிட் ஆன மெசேஜ்ஜை பெறுநர் பார்ப்பதற்காக ரிவோக் ரெக்கியூஸ்ட் வசதி பின்னர் கொண்டுவரப்பட்டது. தற்போதைய அப்டேட்டில், மெஜேச்சை டெலிட் செய்ய முயற்சிக்கும்போது பெறுநர் ரிவோக் ரெக்கியூஸ்ட்டை 13 மணி நேரம், 8 நிமிடம், 16 நொடிக்குள் பெறவில்லை எனில் டெலிட் ஆன அந்த மெசேஜ்ஜை மீண்டும் எடுக்க முடியாது.

பெறுநரின் மொபைல் ஆஃப் செய்து இருந்தாலும் இது பொருந்தும். மேலும், ‘டார்க் மோட்’ என்ற வசதியும் புதிதாக கொண்டு வரப்பட உள்ளது. இரவு நேரங்களில் வாட்ஸ் அப்பில் உள்ள பின்புறத்தில் உள்ள வெள்ளை நிறம் கண்ணுக்கு கூசாமல் இருப்பதற்காக , நைட் மோட் போன்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட வசதிகள் விரைவில் அப்டேட் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



First published: October 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading