முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ்அப் காலில் இனி இது இருக்காதா.? விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

வாட்ஸ்அப் காலில் இனி இது இருக்காதா.? விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Avatar | விரைவில் யூஸர்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான அவதார் சேவையை வாட்ஸ்அப் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் தளமானது, யூஸர்களின் தேவையை முன்கூட்டியே அறிந்து, அவர்கள் ‘போதும், போதும்’ என சொல்லும் அளவிற்கு புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட Delete For Everyone வரம்பு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளாக அதிகரித்தது, வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட் எடுக்கத் தடை, வாட்ஸ்அப் குழு அட்மின்களுக்கு முழு அதிகாரம், வீடியோ காலில் அதிக நபர்களை இணைக்கும் வசதி போன்ற ஏராளமான அப்டேட்களை அறிவித்தது. அந்த வகையில் விரைவில் யூஸர்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான அவதார் சேவையை வாட்ஸ்அப் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த இரண்டு மாதங்களாக வாட்ஸ்அப் அவதார் பற்றிய பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றன. சமீபத்தில் வாட்ஸ்அப்பின் அப்டேட்ஸ் டிராக்கரான WabetaInfo இமோஜிக்களுக்கு அடுத்தபடியாக, யூஸர்களையே அவதாராக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக அறிவித்திருந்தது. வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்புகளின் போது, முகத்தை மறைக்கும் முகமூடி போல யூஸர்கள் அவதாரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்னர் எதிர்காலத்தில் இமோஜி போன்ற அவதார் ஸ்டிக்கர்களாக வெளியிடவும் வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த அற்புதமான புதிய அம்சம் ஏற்கனவே ஃபேஸ்புக், மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் 3D அவதார்களாக பயன்பாட்டில் உள்ளது. இது உங்களைப் போன்ற ஒரு அவதாரை உருவாக்க மற்றும் தனிப்பயனாக்கவும் அனுமதிக்கிறது. இந்த 3D விர்ச்சுவல் படங்களை விரைவில் வாட்ஸ்அப் கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் கால் அல்லது குரூப் காலின் போது தங்களது முகத்தை காட்ட விரும்பாதவர்கள் அவதார் உருவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Also Read : ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு டஃப் கொடுக்கப்போகும் இன்ஸ்டா... வெளியான அசத்தல் அறிவிப்பு.! 

உங்களுக்கேற்ற டிஜிட்டல் அவதாரை உருவாக்க முடி, தோல் நிறம், கண்கள், உடைகள், பாகங்கள் மற்றும் பலவற்றைத் தனிப்பயனாக்குவதற்கான விருப்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், யூஸர்கள் தங்களது 3டி மெய்நிகர் அவதாரை சேட்டிங்கில் ஸ்டிக்கராக பயன்படுத்திக்கொள்ளும் வசதியையும் கொண்டு வர வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சித்து வருவதாக WABetaInfo தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

WabetaInfo அறிக்கையில், “வாட்ஸ்அப்பில் யூஸர்களால் வடிவமைக்கப்படும் அவதாரை அடிப்படையாக கொண்டு, அவர்களுக்கான சொந்த ஸ்டிக்கர் பேக்கை வாட்ஸ்அப் தானாகவே உருவாக்கும். இதன் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை தனிநபர் சேட்டிங் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர முடியும். அவதார் அடிப்படையிலான ஸ்டிக்கர்கள் வெவ்வேறு போஸ்களில் ஒரே செட் ஸ்டிக்கர் பேக்கின் கீழ் கிடைக்கும் என்பது ஸ்கிரீன்ஷாட் மூலமாக தெரிய வந்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் யூஸர்கள் தங்களது அவதாரத்தை புரோபைல் பிக்சராக வைக்கவும் முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : இந்த விஷயத்திற்காக உங்கள் QR code-ஐ ஸ்கேன் செய்யாதீங்க - SBI எச்சரிக்கை

வாட்ஸ்அப் அவதார் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்போ, தகவலோ இதுவரை வெளியாகவில்லை என்றாலும், புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப் தீவிரமாக வேலை செய்து வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Technology, Video calls, Whatsapp Update